twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மேலாடை அணியாமல் டாப்லெஸ்ஸாக விருது வாங்கிய பிரபல பாடகி.. வைரலாகும் போட்டோஸ்!

    |

    லாஸ் வேகாஸ்: பிரபல பாப் பாடகி ஒருவர் அமெரிக்க லத்தீன் கிராமி விருது விழாவில் மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக சென்று விருது வாங்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.'

    அமெரிக்காவில் லத்தீன் கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற இந்த விழாவில் திரைத்துறையில் சாதனை படைத்த பல பிரபலங்களும் பங்கேற்றனர்.

    இதில் சிலி நாட்டை சேர்ந்த 36 வயதான பிரபல பாப் பாடகி மோன் லாஃபர்டேவுக்கு சிறந்த மாற்று இசை ஆல்பத்திற்கான கிராமி விருது அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு விருது விழாவில் பங்கேற்றார் லாஃபர்டே.

    இது தேவையா.. ராமர் பெயர் எழுதிய பிகினி... சர்ச்சை ஆடையால் வறுப்படும் வாணி கபூர்!இது தேவையா.. ராமர் பெயர் எழுதிய பிகினி... சர்ச்சை ஆடையால் வறுப்படும் வாணி கபூர்!

    சிவப்புக் கம்பளம்

    சிவப்புக் கம்பளம்

    கறுப்பு நிற உடையில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்தார் லாஃபர்டே. அப்போது, ஒட்டுமொத்த மீடியாவும் அவரைதான் உற்று நோக்கியது.

    அரை நிர்வாணம்

    அரை நிர்வாணம்

    காரணம்.. உள்ளாடை அணியாமல் மேலாடையை திறந்து முன்னழகு முழுவதையும் காட்டி அரை நிர்வாணமாய் வந்தார் லாஃபர்டே. மேலும் தனது மார்பு பகுதியில் சிலி மொழியில் அவர்கள் டார்ச்சர் செய்கிறார்கள், பலாத்காரம் செய்து கொன்றுவிடுகிறார்கள் என எழுதியிருந்தார்.

    அரசுக்கு எதிராக

    அரசுக்கு எதிராக

    தென் அமெரிக்க நாடான சிலியில் கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமூக சீர்த்தத்தை கொண்டு வரவேண்டும் என்றும் அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    20 பேர் பலி

    20 பேர் பலி

    கடந்த மாதம் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் மூண்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் எடுத்த நடவடிக்கையில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    மக்களுக்கு சமர்ப்பணம்

    மக்களுக்கு சமர்ப்பணம்

    போலீசார் ரப்பர் தோட்டாக்கள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 200க்கும் மேற்பட்டோர் பார்வையிழந்துள்ளனர். இதனை கண்டிக்கும் வகையில் பாடகி மோன் லாஃபர்டே மேலாடை இன்றி விருதை பெற்ற அவர், அந்த விருதை சிலி மக்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறினார்.

    English summary
    A Chilean singer staged a topless protest on the Latin Grammy Awards red carpet. A Chilean singer Mon Laferte received Grammy award in topless. condemns police brutal response on public.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X