சீனாவையும் விட்டு வைக்காத தனுஷ், நித்யாமேனன்: பறக்க பறக்க துடிக்குதே பாட்டுக்கு க்யூட் பெர்ஃபாமன்ஸ்

சீனா: தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.

7 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இருவரும் இந்தப் படத்தில் கூட்டணி வைத்தனர்.

திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து அனிருத் இசையில் வெளியான 'பறக்க பறக்க துடிக்குது' பாடல், செம்ம ஹிட் ஆனது.

DNA கூட்டணியின் மேஜிக்

DNA கூட்டணியின் மேஜிக்

கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் தனுஷின் சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்ட்டில் இணைந்தது. இந்தப் படத்தில் தனுஷ் - நித்யா மேனன் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோல், 'திருச்சிற்றம்பலம்' படத்தின் பாடல்களும் செம்மையாக ஹிட்டானது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத்தின் DNA கூட்டணி, மாஸ் காட்டியது. படத்தின் அனைத்து பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

பறக்க பறக்க துடிக்குது

பறக்க பறக்க துடிக்குது

திருச்சிற்றம்பலம் படத்தில் தாய் கிழவி, பறக்க பறக்க துடிக்குது பாடல்களை தனுஷ் பாடியிருந்தார். இதில், தாய் கிழவி குத்து பாடலாக உருவாகியிருந்தது. அதேபோல் பறக்க பறக்க துடிக்குது ஜாஸ் இசைப் பின்னணியில் செம்மையான மெலடியாக வெளியானது. முக்கியமாக 'பறக்க பறக்க துடிக்குது' பாடலில் தனுஷ் - நித்யா மேனன், தனுஷ் - ராஷி கண்ணா ஜோடி ஆட்டம் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது.

இன்ஸ்டா ரீல்ஸில் செம்ம ஹிட்

இன்ஸ்டா ரீல்ஸில் செம்ம ஹிட்

பறக்க பறக்க பாடலுக்கு பாடலுக்கு ஜானி மாஸ்டர் கோரியோகிராபி செய்திருந்தார். சூப்பரான லைட் மூவ்மெண்ட்ஸ்களுடன் ரொம்பவே க்யூட்டாக உருவாகியிருந்த இந்தப் பாடல், ரசிகர்களையும் சிறகடித்து பறக்க வைத்தது. சிறுசுகள் முதல் இளைஞர்கள், காதலர்கள் என பலரும் இந்தப் பாடலுக்கு ஆடி, இன்ஸ்டா ரீல்ஸில் தெறிக்க விட்டனர். அதனால், பறக்க பறக்க துடிக்குது பாடல், தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

க்யூட்டாக அசத்திய சீன ஜோடி

க்யூட்டாக அசத்திய சீன ஜோடி

தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பலரையும் மயக்கிய 'பறக்க பறக்க துடிக்குது' பாடல், இப்போது சீனாவிலும் பிரபலமாகி வருகிறது. இதை கன்ஃபார்ம் செய்யும் விதமாக சீனாவில் ஒரு பொது இடத்தில் அந்நாட்டைச் சேர்ந்த ஜோடி ஒன்று, பறக்க பறக்க பாடலுக்கு க்யூட்டாக டான்ஸ் ஆடி பிரமாதப்படுத்தியுள்ளனர். இருவரும் தனுஷ், நித்யா மேனனாக மாறி நடனம் ஆடிய வீடியோவை தனுஷின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X