செந்தில் சீரியலில் பிஸியா இருந்த நேரம் பார்த்து நடந்த சம்பவம்..6 மாசமா மோசடி செய்த சினிமா மேனேஜர்!
சென்னை: நடிகர் செந்திலின் வீட்டை தன்னுடைய வீடு என்று கூறி 6 மாதமாக மோசடி செய்த சினிமா துறையின் புரடெக்ஷன் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் செந்தில் தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். 1979ஆம் ஆண்டு முதல் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
இவரின் காமெடியை பீட் செய்யும் அளவுக்கு இன்று வரையும் எந்த நடிகரும் வரவில்லை. அந்தளவுக்கு நகைச்சுவையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார் செந்தில்.

ஏப்பம்விட பார்த்த மேனேஜர்
சமீப காலமாக சினிமாவில் அதிகம் தலை காட்டாமல் உள்ள நடிகர் செந்தில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி சீரியலில் நடித்து வருகிறார். இந்த கேப்பில் அவருடைய வீட்டை ஏப்பம் விட பார்த்துள்ளார் சினிமாத்துறை சேர்ந்த புரடெக்ஷன் மேனேஜர் ஒருவர்.

ரூ. 2 லட்சம் வாடகை
அதாவது சினிமாத்துறையில் புரடெக்ஷன் மேனேஜராக பணியாற்றியவர் சகாயராஜ். இவர் விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டடத்தை மாதம் 2 லட்சம் ரூபாய் வாடகை என்ற அடிப்படையில் வாடகைக்கு எடுத்தார்.

சந்தேகமடைந்த செந்தில்
10 அறைகள் கொண்ட அந்த கட்டடத்தை சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டாக நடத்தி வந்துள்ளார் சகாயராஜ். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக செந்திலுக்கு வாடகை தரவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த செந்தில் நேரில் சென்று வீட்டை பார்த்துள்ளார்.

போலீஸில் புகார்
அப்போது சகாயராஜ், செந்திலின் வீட்டை தன்னுடைய வீடு எனக்கூறி அதனை பலரிடம் லீஸ்க்கு விட்டு ஒப்பந்தம் செய்து பணம் பெற்றிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் செந்தில் புகார் அளித்தார்.

அதிர்ச்சி
அவரது புகாரின் அடிப்படையில் சகாயராஜை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். நடிகர் செந்தில் வாடகைக்கு விட்ட வீட்டை சினிமா புரடெக்ஷன் மேனேஜர் தனக்கு சொந்தமாக்கி கொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











