யார் துரோகம் செய்தா? டி இமான் வீட்டில் நடந்தது என்ன.. புட்டு புட்டு வைத்த நண்பர்!
சென்னை: சிவகார்த்திகேயன் டி இமான் விவகாரம் பூதாகரமாகி இருக்கும் நிலையில், இமான் வீட்டில் உண்மையில் என்ன நடந்தது என நண்பர் ஒருவர் புட்டு புட்டு வைத்துள்ளார்.
பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு, சிவகார்த்திகேயன் மற்றும் இமான் இருவரின் நெருங்கிய நண்பர் பேட்டி அளித்துள்ளார். அவர் கேட்டுக்கொண்டதை அடுத்து அவரின் பெயரை அந்த யூடியூப் தளம் வெளியிடவில்லை. இதனால் நாமும் அவர் சொன்ன தகவல்களை மட்டும் இப்போது பார்க்கலாம்.

இமானுக்கு தகுதியே இல்ல: அதில், துரோகம் செய்துவிட்டார் என்று சிவகார்த்திகேயனைப் பார்த்து சொல்லும் தகுதி இமானுக்கு இல்லை. நான் எந்த பெண் பின்னும் சென்றது இல்லை. எந்த பெண்ணுடனும் எனக்கு பழக்கம் இல்லை. ஆனால், பல பெண்கள் என்னிடம் தவறான சேட்டிங் செய்திருக்கிறார்கள் என்று இமானே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அப்போ இது இமான் மோனிகாவுக்கு செய்த துரோகம் தானே.
பெண்களிடம் ஆசைவார்த்தை: இமான் பொது இடத்தில் ஆன்மீக சிந்தனை குணம் உள்ளவர் போல எப்போதும் காட்டிக்கொள்வார். ஆனால், உண்மையான அவரின் குணம் என்ன என்பது அவருடன் சினிமாவில் நெருங்கி பழகியவர்களுக்குத்தான் தெரியும். கோரஸ் பாட வரும் பெண்களிடமும் ஆசை வார்த்தை பேசி காரியத்தை சாதித்துக்கொள்வார். இந்த விஷயம் தெரிந்து தான் மோனிகா இமானிடம் பல முறை சண்டை போட்டு இருக்காங்க. ஆனால், இமானின் அப்பா மகனின் வாழ்க்கை வீணாகிவிடக்கூடாது என்று இருவரையும் சமாதானப்படுத்தினார்.
திருந்தமாட்டார்: இந்த நேரத்தில் தான், குடும்பத்தில் ஒருத்தரான சிவகார்த்திகேயனிடம் அழுது புலம்பி இருக்கிறார் மோனிகா. இதுகுறித்து, இமானிடம் சிவகார்த்திகேயன் பல முறை பேசியும், அவர் திருந்தாததால், விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்வதுதான் சரி என்று சிவகார்த்திகேயன், மோனிகாவிற்கு அறிவுரை கூறியுள்ளார். இதைத்தான் இமான் சிவகார்த்திகேயன் துரோகம் செய்தது போல பேசி இருக்கிறார்.
நல்ல மனிதர்: அவர் பேசியது ஒருபுறம் என்றால் அதற்கு கண்ணு காது வைத்து இணையத்தில் பல வதந்திகள் பரவி வருகிறது. இரண்டாவது திருமணம் செய்துவிட்டு மூன்றாண்டு கழித்து இந்த விஷயத்தை சொல்ல என்ன காரணம். நல்ல மனிதரான சிவகார்த்திகேயன் மீது அபாண்டமாக பரவி வரும் வதந்தியை பொருத்துக்கொள்ள முடியாமல் தான் இந்த விஷயத்தை இப்போது சொன்னேன் என்று இருவரிடமும் நெருங்கி பழகிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் நண்பர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











