twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காற்றின் மொழி முதல்நாள் முதல்காட்சிக்கு ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகம்: மாணவிகள் மகிழ்ச்சி

    |

    Recommended Video

    காற்றின் மொழி முதல்நாள் முதல்காட்சி | சோகத்தில் விஜய் தேவரகொண்டா- வீடியோ

    நெய்வேலி: ஜோதிகாவின் காற்றின் மொழி திரைப்படத்தை மாணவிகள் பார்க்க கல்லூரி நிர்வாகமே ஏற்பாடு செய்துள்ளது.

    ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் நடித்துள்ள படம் காற்றின் மொழி. வரும் 16ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் முதல்நாள் முதல் காட்சி பார்க்க நெய்வேலி நேஷனல் கல்லூரி மாணவிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகமே செய்திருக்கிறது.

    A Colleges plan for Kaatrin Mozhi FDFS!

    இது குறித்து கல்லூரி ட்ரஸ்ட் உறுப்பினர்களான வைரம் மற்றும் விஜயலட்சுமி கூறியதாவது...

    நடிகை ஜோதிகா பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், தன்னம்பிக்கையூட்டும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போதுள்ள ஸ்மார்ட் போன் உலகத்தில் நல்லது எது கெட்டது எது என தணிக்கை செய்ய முடியவில்லை. நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் வேகமாக பரவி விடுகின்றன.

    ஜோதிகா போன்ற நல்ல எண்ணம் கொண்டவர்கள் தேர்ந்தெடுத்து நடிக்கும் நல்ல கதைகள் பெண்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது. மகளிர் மட்டும் திரைப்படத்தை எங்கள் கல்லூரி மாணவிகள் உள்பட அனைவரும் கண்டு களித்தோம்.

    36 வயதினிலே, மகளிர் மட்டும் போன்ற படங்கள் பெண்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? எப்படி வாழ வேண்டும் என சொல்லியது. ராதாமோகன் நல்ல படங்களை கொடுக்கும் இயக்குனர். மொழி திரைப்படத்தைப் போல காற்றின் மொழியும் சிறந்த படமாக இருக்கும் என நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Neyveli National college management decided to take their students to FDFS of Kaatrin Mozhi movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X