twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு நடிகனாக என் காரில் ஏறாதே பிக்பாஸ் பிரபலத்துக்கு பிரபல இயக்குநர் உத்தரவு!

    By Staff
    |

    Recommended Video

    மகனை நினைத்து விழா மேடையில் ஃபீல் செய்த பி.வாசு

    சென்னை: ஒரு நடிகனாக தனது காரில் ஏற வேண்டாம் என மகன் சக்திக்கு பி.வாசு கட்டளையிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் தான் பி.வாசு ரஜினி மற்றும் பிரபு போன்றவர்களை வைத்து படங்கள் இயக்கி பல வெற்றிகளை கொடுத்தவர். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பல வருடங்களாக இயக்குனராக திகழ்ந்து வருகிறார்.

    வாசுவின் அப்பா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர்க்கு மேக் அப் மேனாக பல வருடங்களாக பணியாற்றினார்.

    A Commercial Director of 90s P.vasu says to his son dont enter into my car as a actor

    வாசு இயக்குனர் சி.வி.ஸ்ரீதர் உடன் அஸிஸ்டன்ட் ஆக சிறிது காலம் இருந்தார். பின் தனது முதல் படமாக பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தை இயக்கினார். 90 களில் இவரது படங்கள் அதிகம் ஹிட் ஆகின.

    இவர் பிரபுவை வைத்து இயக்கிய சின்னத்தம்பி படம் பல நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இப்படத்திற்காக இதில் நடித்த குஷ்புவிற்கு கோவில் கட்டப்பட்டது. இப்படம் இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படுகிறது.

    ரஜினியை வைத்து இவர் எடுத்த மன்னன் திரைப்படம் ரஜினியின் திரை
    வாழ்க்கையில் ஒரு மெகா ஹிட் ஆக அமைந்தது. அதே போல ரஜினியை வைத்து இவர் எடுத்த சந்திரமுகி படமும் பல நாட்கள் திரையரங்கில் ஒடி சாதனை படைத்தது. இவரது படங்கள் அனைத்தும் கமர்சியல் படங்களாக இருந்ததால் ரசிகர்கள் வாசுவின் படங்களை அதிகம் விரும்பினார்கள்.

    இதனை தொடர்ந்து இவரது மகனான சக்தியை தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். இதன் பின் பல படங்கள் இயக்கினார் வாசு.

    சமீபத்தில் நடந்த பேட்டியில் அவர் கூறியதாவது என் மகனை வைத்து படம் இயக்கும் போது அவனை எனது காரில் ஏற வேண்டாம் என்று கூறினேன். ஒரு நடிகனாக என் காரில் ஏறாதே என்று சொன்னேன். துணை இயக்குனர்களுடன் வா என்றேன். அப்போது தான் அவர்கள் நிறைய கற்று கொடுப்பார்கள் மற்றும் பல விசயங்களை தெரிந்து கொள்ளலாம் என்றேன் எனக் கூறினார் இயக்குனர் பி.வாசு. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சக்தி கலந்து கொண்டு தமிழக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A 90's popular commercial Director says about his son and the movie which directed by him for his son. And he said to his son don't come with me in my car as a actor.Go with Assistant Directors and you get lot of experience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X