கல்வி முறையை மாற்ற ஹீரோவாகும் காமன் மேன் சிவகார்த்திக்கேயன் #HeroTeaser
சென்னை: கல்வி முறையை மாற்ற காமன் மேனால முடியாது ஒரு ஹீரோ வேண்டும் என்பதை சொல்கிறது சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள ஹீரோ டீசர்.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ஹீரோ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இன்றைய கல்வி முறையின் அவலங்களையும், பெருகிவரும் வேலைவாய்ப்பின்மையை பற்றியும் நறுக்கு தெறிக்கும் வசனங்களாக எடுத்து சொல்லியிருக்கின்றனர். இப்படம் நிச்சயம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல விருந்தாக அமையும்.

நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் தான் ஹீரோ. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் கோட்டபாடி ஜெ.ராஜேஷ் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை இயக்குகிறார் இரும்புத்திரை படம் இயக்கிய பி.எஸ்.மித்ரன்.
இரும்புத்திரை படம், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அப்பாவி மக்களிடம் இருந்து எப்படி பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள் என்பதனை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும். இந்தத் படம் நடிகர் விஷாலுக்கும் நடிகர் அர்ஜீனுக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து அர்ஜீன் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஹீரோ பட தலைப்புக்காக பி.எஸ்.மித்ரன் படக்குழுவுக்கும் தெலுங்கில் ஆனந்த் அண்ணாமலை படக்குழுவுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இருவருமே தயாரிப்பாளர் சங்கத்தில் தங்களது படத்தின் தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளனர்.
ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் கவனக்குறைவு காரணத்தால், இரு படங்களும் பூஜை போட்டு படத்தை ஆரம்பித்த பின்பே இந்த பிரச்சினை வெளியே தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிய .மீண்டும் இரு தயாரிப்பாளர்களும் பேச்சு வார்த்தையை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹீரோ படத்தின் 2ஆவது லுக் போஸ்டர் கடந்த 18ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பையும் கடந்த 2 நாட்களக்கு முன்பு படக்குழு ட்விட்டரில் வெளியிட்டது.
அதில், இப்படத்தின் டீசர் இன்று காலை 11,03 மணிக்கு வெளியாகும் என்று கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனத் நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. இதனால், ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஹீரோ படக்குழு சொன்னது போலவே, இன்று காலையில் ஹீரோ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதை அநேகமாக இன்றை கல்விமுறையையும் வேலைவாய்ப்பின்மையையும் விமர்சிக்கும் விதமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்களும் அதை உறுதிப்படுத்துகிறது. அதே போல் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் காட்சியமைப்புகள் அனைத்தும் மிரட்டலாக வந்துள்ளது.
ஒருத்தன் ஏ ஃபார் ஆப்பிள்னு சொன்னா அவன் என்னோட புராடக்ட். ஆனா, ஏ ஃபார் ஏரோப்ளேன்னு சொன்னா அவன் என்னோட காம்படீட்டர், என்ற டயலாக்கும்,
திறமையாவது மண்ணாங்கட்டியாவது, இங்க எல்லாத்துக்கும் காசுதான், நீட்ட வேண்டியதை நீட்டுனா சீட்டெல்லாம் தானா வரும், என தெறிக்க விடும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
மைண்ட் யுவர் பிஸ்னெஸ், இதத்தான் நம்ம எஜுகேசன் சிஸ்டம் கத்து தருது, நம்ம கல்வி முறையில எல்லாரும் கத்துக்க முடியாது, அதே சமயத்தில எல்லோராலையும் சாதிக்க முடியாது. இந்த சிஸ்டத்த மாத்த காமன் மேனால முடியாது. அதுக்கு ஒரு ஹீரோ வேணும் என்று ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ஆவேச வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் அனைத்தும் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதோடு, நிச்சயமாக வெற்றிப்பட வரிசையில் சேர்ந்துவிடும்.


Click it and Unblock the Notifications











