ஐயப்பனை கொச்சைப்படுத்தி பாடல்.. பா ரஞ்சித், இசைவாணி மீது புகார்!
சென்னை: இயக்குநர் பா ரஞ்சித் நடத்தும் நீலம் பண்பாட்டு மையத்தில் நடத்தப்பட்ட ஒரு விழாவில் இந்து மத கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பாடல் பாடிய பாடகி இசை வாணி பாடி மீதும் இயக்குர் பா ரஞ்சித் மீதும் கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த விழாவில் கானா பாடகி இசைவாணி, 'ஐ எம் சாரி ஐயப்பா.. உள்ளே வந்தா தப்பாப்பா' என்று ஐயப்பன் குறித்தும் கடவுள் நம்பிக்கை குறித்து இழிவுப்படுத்தும் வகையில் பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் இணையத்தில் டிரெண்டான நிலையில் இணைவாசிகள் பல கேள்விகளை எழுப்பினர்.

கைது செய்யுமா: அதில், தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக நடிகை கஸ்தூரியை கைது செய்த தமிழக அரசு, ஐயப்பனை பக்தியோடு விரதம் இருந்து வணங்கும், கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்திய வகையில் பாடல் பாடிய இசைவாணியை கைது செய்யுமா என்றும், கஸ்தூரிக்கு ஒரு நியாயம், இசைவாணிக்கு ஒரு நியாயமா என்றும் கேள்வி எழுந்தது.
பா ரஞ்சித் மீது வழக்கு: இதையடுத்து, கடவுள் ஐயப்பன் குறித்தும், அவருக்கு மேற்கொள்ளும் விரதங்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் பாடியதாக கானா இசைவாணி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் மீது கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்து கடவுளையும், வழிபாட்டு முறையையும் கொச்சைப்படுத்தும் வகையில் பாடல் பாடிய இசைவாணி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நீலம் பண்பாட்டு மையம் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications