பிக் பாஸ்க்கு கூட இப்படி பண்ணலையே.. குக் வித் கோமாளி கிராண்ட் ஃபினாலேவில் குவியும் பிரபலங்கள்!

சென்னை: தமிழ்ப்புத்தாண்டு அன்று குக் வித் கோமாளி சீசன் 2வின் பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு வெறும் போட்டியாளர்களை மட்டுமே சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்தனர்.

ஆனால், குக் வித் கோமாளி 2வின் கிராண்ட் ஃபினாலேவில் சிலம்பரசன், சந்தோஷ் நாராயணன், தீ மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் (காணொளி) என லிஸ்டே பெருசாகவும் பிரம்மிப்பாகவும் உள்ளது.

இது தான் டாப்

இது தான் டாப்

விஜய் டிவியில் டிஆர்பி கிங்காக வலம் வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியையே இந்த முறை குக் வித் கோமாளி சீசன் 2 ஓரங்கட்டி ஏகப்பட்ட மக்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக மாறி விட்டது. தற்போது வெளியாகி உள்ள புரமோவிலும் சந்தோஷ் நாராயணன் இதை உறுதி செய்யும் படி பேசி உள்ளார்.

புத்தாண்டு ஸ்பெஷல்

புத்தாண்டு ஸ்பெஷல்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியை வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்புகிறது விஜய் டிவி. சின்னத்திரை ரசிகர்களின் மிகவும் பிடித்தமான ஷோவாக மாறியுள்ள குக் வித் கோமாளியின் கிராண்ட் ஃபினாலேவுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.

சிம்முல பூ வச்சா சிம்பு

சிம்முல பூ வச்சா சிம்பு

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ஐ சிம்பு தான் தொகுத்து வழங்குவார் என பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருவதை உறுதி செய்யும் விதமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் சிம்பு கலந்து கொண்டு கலக்கி உள்ளார். மாம்பழத்தை வைத்து ஈஸ்ட் மாம்பழம் வெஸ்ட் மாம்பழம் என பண்ணும் ஜோக் மற்றும் சிவாங்கி சிம்முல பூ வச்சா சிம்பு என போடும் மொக்கை ஜோக் எல்லாம் வேற லெவல் சிரிப்பலையாக இருக்கும் என்றே தெரிகிறது.

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன்

என்ஜாய் எஞ்சாமி, கர்ணன் என இசை உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குக் வித் கோமாளி சீசன் 2வுக்கு சிம்புவை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். தற்போது வெளியாகி உள்ள புரமோவில் சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் அதிகம் பேரால் பேசபட்ட நிகழ்ச்சியாக இது உள்ளது என பாராட்டி உள்ளார்.

பாடகி தீ

பாடகி தீ

120 மில்லியனை அசால்ட்டாக தாண்டி அடுத்த சாதனையை படைக்க ரெடியாகி வரும் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய தெருக்குரல் அறிவு மற்றும் பாடகி தீ உள்ளிட்டோரும் சந்தோஷ் நாராயணன் உடன் இந்த கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வேற லெவல் டிரெண்டிங்கிற்கு கொண்டு செல்ல உள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் கலாய்

கடைசியாக விர்ச்சுவலாக திரையில் தோன்றி குக் வித் கோமாளி போட்டியாளர்களை மரண பங்கமாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலாய்க்கும் காட்சிகளும் இந்த புரோமோவில் இடம்பெற்றுள்ளது. எப்படா ஏப்ரல் 14 வரும் கிராண்ட் ஃபினாலேவை பார்த்தே ஆகணுமே என ரசிகர்களும் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X