twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தை உடைக்க ஒரு திரைமறைவு சதி?

    By Shankar
    |

    தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்எம் அண்ணாமலை, செயலாளர் பன்னீர்செல்வம், கோவை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், சென்னை நகர திரையரங்க சங்க தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அரசு செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அபிராமி ராமநாதன், "அமைச்சர்கள் எங்களது கோரிக்கைகளை முடிந்தவரையில் நிறைவேற்றித் தருவதாகக் கூறியிருப்பதால், தியேட்டர் உரிமையாளர்கள் நடத்திவரும் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படும். என்ன படம் இருக்கிறதோ, அதைத் திரையிடுவார்கள்," என அபிராமி ராமநாதன் குறிப்பிட்டார்.

    கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களை முறைப்படுத்துவது மற்றும் தியேட்டர் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் சில கோரிக்கைகளுடன் இந்த வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது. 'என்ன இருந்தாலும் தயாரிப்பாளர்கள் இல்லாமல் நாம் இல்லை' என விவாதித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், 'நமக்கான கோரிக்கைகளையும் முன்வைத்து களமிறங்குவோம்' எனத் தமிழக அரசின் 8% கேளிக்கை வரி, திரையரங்கு உரிம புதுப்பிப்பு காலத்தை அதிகப்படுத்துதல், தியேட்டர் இருக்கைகளைக் குறைத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து திரையரங்கங்களை மூடினார்கள். ஆனால், தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் முன்னரே, இவர்களது வேலைநிறுத்தம் முடிந்திருக்கிறது அல்லது முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

    A conspiracy against cinema strike?

    இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. வேலைநிறுத்தத்தை முடித்துக்கொள்வதாக, அமைச்சர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய அபிராமி ராமநாதன் வேலைநிறுத்தத்தில் பங்குகொள்ளவே இல்லை. அவரது தியேட்டரில், அதுவரை அவரிடமிருந்த அத்தனைப் படங்களும் திரையிடப்பட்டுக் கொண்டுதானிருந்தது.

    நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள 'பசிஃபிக் ரிம் 2' திரைப்படம் அபிராமி தியேட்டர்களில் மூன்று நாள்களுக்கு முன்பே தமிழில் ரிலீஸானது.

    இந்த வகையில் வேலை நிறுத்தத்தின்போது அதில் கலந்து கொள்ளாத அபிராமி ராமநாதன் அமைச்சர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டதும், அதற்குப் பிறகு இருக்கும் படங்களைத் திரையிடுவார்கள் எனக் கூறியதும் தனித் திரையரங்குகளை நடத்தி வரும் தியேட்டர் உரிமையாளர்களிடத்தில் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.

    "மூன்று நாள்கள் முதல் ஏழு நாள்கள் வரையில் மட்டுமே வாழ்நாள் கொண்டதாக தமிழ்த் திரைப்படங்கள் தற்போது உள்ளன. எனவே, ஒரே படத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் வழக்கம் தமிழக மக்களிடத்திலிருந்து மாறிவிட்டது. இந்த நிலையில் பழைய படங்களை திரையிட்டால் வசூல் இருக்காது.

    அரசாங்கம் சொன்னபடி தியேட்டர்களைத் திறந்து விட்டோம். புதிய படங்கள் ரீலீஸ் ஆகாததால் தியேட்டர்களை நடத்த முடியவில்லை," என சில நாட்களில் அரசிடம் முறையிட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் திட்டமிட்டிருக்கிறது.

    தமிழக அரசுக்கும் - தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷாலுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. நல் உறவு இல்லை. தற்போது தமிழகத்தில் உள்ள 1100 தியேட்டர்களில் 350க்கும் அதிகமான தியேட்டர்கள் திருப்பூர் சுப்பிரமணி, கோவை ராஜமன்னார், சேலம் இளங்கோ, திருச்சி மீனாட்சி சுந்தரம், பிரான்சிஸ், வேலூர் சீனு ஆகியோர் கட்டுப்பாட்டில் உள்ளன.

    இவர்கள் தமிழ் பட தயாரிப்பாளர்கள் பலருக்கு பைனான்ஸ் கொடுத்துள்ளனர். தணிக்கை முடிந்து ரீலீஸ் செய்ய முடியாத சிறு பட தயாரிப்பாளர்களிடம் தாங்களே அனைத்து செலவுகளையும் செய்து ரிலீஸ் செய்து தருவதாக திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

    இதன் மூலம் உறுதியாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை பலவீனப்படுத்திவிட்டால் வேலை நிறுத்தத்தை பிசு பிசுக்கச் செய்யலாம் என திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    அப்படி முடியாத நிலையில் அரசு மூலம் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நெருக்கடி கொடுத்து படங்களை ரிலீஸ் செய்ய வைப்பது எனவும் திட்டமிட்டுள்ளனராம் தியேட்டர் உரிமையாளர்கள்.

    இந்த ஸ்ட்ரைக்குக்கு எதிராக என்ன நெருக்கடி வந்தாலும் அதனை சந்திப்பது என்பதில் உறுதியாக இருக்கிறதாம் தயாரிப்பாளர்கள் சங்கம்.

    - நமது நிருபர்

    English summary
    Sources say that there is a conspiracy planned against the ongoing cinema industry strike.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X