Samantha - குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடும் சமந்தா.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: Samantha (சமந்தா) பாடகி சின்மயியின் இரண்டு குழந்தைகளுடன் சமந்தா விளையாடும் க்யூட் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அங்கு நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக அவர்களது திருமணம் கோவாவில் நடந்தது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

மையோசிடிஸ் நோய்: திருமண வாழ்க்கை முறிவுக்கு பிறகு சமந்தா கோலிவுட், ஹாலிவுட் என றெக்கை கட்டி பறந்தார். நடிப்பு மட்டுமின்றி புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமாவுக்கு நடனமும் ஆடினார். இதனால் அவரது கரியர் கிராஃப் உச்சம் சென்றது. இப்படி அவரது கரியரின் கிராஃப் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோய் வந்தது. தன்னம்பிக்கை இழக்காத சமந்தா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு தற்போது அந்த நோயிலிருந்து மீண்டிருக்கிறார்.
நடிப்பில் கவனம்: நோயிலிருந்து மீண்டிருக்கும் சமந்தா மீண்டும் முழு வேகத்தில் படங்களில் கமிட்டானார். அந்தவகையில் அவர் நடித்த சாகுந்தலம் படம் அண்மையில் ரிலீஸாகி படுதோல்வியை சந்தித்தது. பத்து கோடி ரூபாய்கூட அந்தப் படம் வசூல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படமானது செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. ட்ரெய்லர் ஒன்பதாம் தேதி வெளியாகவிருக்கிறது.

சிட்டாடல்: இதற்கிடையே ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதன் இந்திய வெர்ஷனில் ப்ரியங்கா சோப்ரா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க கமிட்டானார். அதற்கான ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த வெப் சீரிஸை ராஜ் & டிகே இயக்குகின்றனர். சமந்தாவுடன் வருண் தவான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
ஓய்வு: நோயிலிருந்து மீண்ட சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாவார் என்று எதிர்பார்த்த சூழலில் சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து; கமிட்டான படங்களுக்கான அட்வான்ஸையும் திருப்பி கொடுத்துவிட்டார்.
குழந்தைகளுடன்: இந்நிலையில் பாடகி சின்மயியின் குழந்தைகளுடன் க்யூட்டாக சமந்தா விளையாடும் வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் சமந்தா ஒரு பக்கமாக இருந்தபடி நாற்காலியை தள்ள, சின்மயியின் குழந்தைகளும் பதிலுக்கு அந்த நாற்காலியை தள்ளுகின்றனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படியே எப்பவும் ஜாலியாக இருங்கள் சமந்தா. அதுதான் கொள்ளை அழகு என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
25 கோடி ரூபாய் கடன்: இதற்கிடையே சமந்தா தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ஒருவரிடம் தன்னுடைய சிகிச்சைக்காக 25 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டார் என தகவல் வெளியானது. ஆனால் அதனை தீவிரமாக மறுத்த சமந்தா என்னை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு நான் உழைக்கும்போது பணத்தை சேர்த்துவைத்திருக்கிறேன் என விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











