அழகில் வனிதாவை மிஞ்சிய மகள்.. ஹீரோயின்கள் எல்லாம் ஓரம் போங்க.. அடுத்து உருவாகும் கதாநாயகி!
சென்னை: நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா அம்மாவை மிஞ்சும் அழகில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் உச்சுகொட்டி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் சினிமா குடும்பத்தின் பின்புலத்தில் இருந்து வந்த நடிகை வனிதா தனது பெற்றோர், உறவினர்களை விட்டு பிரிந்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

கணவரை பிரிந்தார்: நடிகை வனிதா விஜய்குமார் 2000ம் ஆண்டும் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஆகாஷ் வனிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007ம் ஆண்டு பிரிந்துவிட்டார். இதில், இரு குழந்தைகளில் ஜோவிகா வனிதாவுடனும், ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமார் மற்றும் தந்தை ஆகாஷ் உடன் இருந்து வருகிறார்கள்.
இரண்டாவது மகள் ஜெனித்தா: ஆகாசை விவாகரத்து செய்த வனிதா, அந்த ஆண்டே தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார், ஆனந்த் ஜெய் ராஜனுக்கும் வனிதாவிற்கும் பிறந்த மகள் தான் ஜெனித்தா ராஜன். சில ஆண்டு காலம் வாழ்ந்த இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, 2012ம் ஆண்டு விவகாரத்து செய்து பிரிந்தார். பின் தனது இரண்டு மகள்களையும் வனிதா வளர்த்து வந்தார். அண்மையில், ஆனந்த் ஜெய் ராஜன் கோர்டில் வழக்கு தொடர்ந்து ஜெனித்தாவை தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார்.

அழகில் அம்மாவை மிஞ்சிய மகள்: தற்போது வனிதாவிடம் அவரின் மூத்த மகள் ஜோவிகா இருக்கிறார். வனிதா தற்போது யூடியூப் சேனல், ஷூட்டிங், பிஸ்னஸ் என பிசியாக இருந்து வருவதால், மகள், அம்மாவின் பிஸ்னசை கவனித்து வருகிறார். அவ்வப்போது, ஊடகங்களில் தென்பட்டு வரும் ஜோவிகா, தனது 18வது பிறந்த நாளை கொண்டாடி உள்ள நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், அழகில் வனிதாவை மிஞ்சிய மகள் என்றும், ஹீரோயின்கள் எல்லாம் ஓரம் போங்க அடுத்த ஹீரோயின் ரெடி என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இரண்டாவது இன்னிங்ஸ்: வெள்ளித்திரையில் நடிகை விஜய்க்கு ஜோடியாக அறிமுகமான வனிதா, திருமணத்திற்குப் பின் திரைத்துறையை விட்டு சிலகாலம் விலகி இருந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். நடிகை வனிதா, அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு, திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











