வா மாமே கபடி ஆடலாமா... பிரகாஷ்ராஜை கலாய்த்த விஜய்... ட்ரெண்டாகும் வாரிசு டெலிட்டட் சீன்
சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
திரையரங்குகளில் 300 கோடிக்கும் மேல் வசூலித்த வாரிசு, கடந்த மாதம் 22ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்திலும் வெளியானது.
இந்தப் படம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், வாரிசு படத்தில் இருந்து விஜய்யின் தரமான டெலிட்டட் சீனை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக விஜய்யின் வாரிசு பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11ம் தேதி வெளியானது. அதேநாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாகி இரண்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் வாரிசு திரைப்படம் நான்கே வாரங்களில் 300 கோடி ரூபாய் வரை வசூலித்து மாஸ் காட்டியது.

விஜய்யின் டெலிட்டட் சீன்
வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான இப்படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த மாதம் 22ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி, ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், வாரிசு படத்தில் இருந்து செம்ம மாஸ்ஸான டெலிட்டட் சீனை அமேசான் வெளியிட்டுள்ளது.

கபடி ஆடலாமா மாமே
இந்தப் படத்தில் சரத்குமாரின் மூன்றாவது மகனாக விஜய் நடித்திருப்பார். அவரது அண்ணன்களாக ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் இருவரும் நடித்திருந்தனர். தொழில் போட்டியில் சரத்குமாரின் குடும்பத்தை பிரித்து அவரை பழிவாங்கத் துடிப்பார் பிரகாஷ்ராஜ். ஆனால், பிரகாஷ்ராஜின் திட்டத்தை தவிடு பொடியாக்குவதே விஜய்யின் ஃபுல்டைம் வேலையாக இருக்கும் இந்தப் படத்தில். இதன் பின்னணியில் பிரகாஷ் ராஜிடம் சவால் விடும் விஜய் நடித்த காட்சியை தான் தற்போது அமேசான் வெளியிட்டுள்ளது.

மாஸ் ரீ-என்ட்ரி கொடுக்கும் விஜய்
தற்போது வெளியான டெலிட்டட் சீனில், பிரகாஷ்ராஜின் அலுவலகம் தேடி வருகிறார் விஜய். அவரை தனது ஆபிஸ் ஊழியர்கள் முன்னிலையில் சோகமாக நடந்து வரவைக்கும் பிரகாஷ்ராஜ், உன் அப்பாவை நான் ஜெயிப்பேன்னு என் ஆபிஸில் இருக்குறவங்க எதிர்பார்க்கவே இல்லை என சீன் போடுகிறார். அப்போது அப்பா கூட இருக்குற போட்டியில் என் குடும்பத்தை பழிவாங்க வேண்டாம் என கெஞ்சுவதாக பேசுகிறார் விஜய்.
ட்ரெண்டான டெலிட்டட் சீன்
அதற்கு விஜய்யின் அப்பா சரத்குமாரை தன் காலடியில் அமர்ந்து தோற்றதை ஒத்துக்கொள்ள வேண்டும் என பிரகாஷ்ராஜ் கண்டிஷன் போடுகிறார். அப்போது தனது வழக்கமான மாடுலேஷனில் பிரகாஷ்ராஜை கலாய்க்கும் விஜய், என்ன மாமே நீ என் குடும்பத்த வச்சிதான ஆடிப் பார்க்க ஆசைப்படுற. அதையும் பார்த்துடலாம் என கூறி, கில்லி படத்தில் வரும் கபடி கபடி பஞ்ச் டயலாக் பேசி மாஸ் காட்டுகிறார். அதோடு போகும் போது பிரகாஷ்ராஜின் ஆபிஸ் கண்ணாடி கதை ஒரேகிக்கில் பிரேக் செய்துவிட்டு கெத்தாக வெளியே செல்கிறார். இந்த டெலிட்டட் சீன் டிவிட்டரில் தாறுமாறாக ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











