பிரபல நடிகருக்காக 66 அழகிகளை ரிஜெக்ட் செய்த இயக்குநர்.. வெளியான திடுக் தகவல்!
சென்னை: பிரபல நடிகருக்காக 66 அழகிகளை ரிஜெக்ட் செய்ததாக அறிமுக இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹிரோவாக அறிமுகமானவர் அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகனான இவர், பல படங்களில் நடித்திருக்கிறார்.
பாலாவின் பரதேசி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார். தொடர்ந்து இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி, கனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் அதர்வா
குருதி ஆட்டம், தள்ளி போகாதே ஆகிய படங்களில் நடித்து வரும் அதர்வா, நடிகை வாணி போஜனுடனும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் அதர்வா.

இயக்குநர் தகவல்
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இந்நிலையில் படம் குறித்து பேசிய இயக்குநர், இந்தப் கதாப்பாத்திரத்திற்கு அதர்வா பொருத்தமாக இருப்பார் என்று கூறினார். ஆனால் படத்திற்கு ஹீரோயினை தேர்வு செய்யதான் ரொம்ப நாள் ஆகிவிட்டதாக கூறினார்.

66 அழகிகள்
வில்லனை நேருக்கு நேராக டீல் செய்யும் கதாப்பாத்திரம் என்பதால் ஹீரோயின் தேர்வில் ரொம்பவே மெனக்கெட்டதாக கூறினார். 66 அழகிகளை பார்த்துவிட்டு கடைசியாக லாவண்யா திரிபாதியை தேர்வு செய்ததாக கூறினார்.

லாவண்யா திரிப்பாதி
லாவண்யா திரிப்பாதி பிரம்மன் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அண்மையில் தெலுங்கு நடிகர் சுனிசித் தன்னால் லாவண்யா மூன்று முறை கர்ப்பானார் என கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த லாவண்யா, சுனிசித் பொய் பிரச்சாரம் செய்வதாக கூறி அவர் மீது போலீஸில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











