பிக்பாஸ் தர்ஷனை தத்தெடுக்க தயாராக இருக்கும் பிரபல நடிகை! ஃபாத்திமா பாபு சொன்ன உண்மை!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷனை தத்தெடுக்க பிரபல நடிகை ஒருவர் காத்திருப்பதாக ஃபாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.
செய்தி வாசிப்பாளரான ஃபாத்திமா பாபு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். மிகவும் நேர்மையாக விளையாடிய அவர் யாரும் எதிர்பாராத வகையில் முதல் வாரத்திலேயே முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை ஃபாத்திமா பாபுவை மம்மி மம்மி என்றுதான் அழைத்து வந்தார் தர்ஷன். ஃபாத்திமா பாபு வெளியேறிய போது துக்கத்தை அடக்க முடியாமல் சின்னக் குழந்தையை போல் கதறி அழுதார்.

டைட்டில் வின்னர்
ஆனால் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் யாரும் வெளியேறிய போது தர்ஷன் அப்படி அழவில்லை. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் கூட தர்ஷனை விட்டுத்தராமல் பேசிய ஃபாத்திமா பாபு, டைட்டில் வின்னராகும் வாய்ப்பு தர்ஷனுக்கு மட்டுமே உள்ளது என்றார்.

நம்ம வீட்டுப் பிள்ளை
இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஃபாத்திமா பாபு மீண்டும் தர்ஷன் குறித்து பேசியுள்ளார். தர்ஷன் நம்ம வீட்டு பிள்ளை என்று கூறிய அவர், தங்கள் வீட்டில் கூட அனைவருக்கும் தர்ஷனை பிடித்திருப்பதாகவும் யாரும் தர்ஷனை விட்டுக்கொடுப்பதில்லை என்றார்.

காத்திருக்கும் நடிகை
மேலும் தர்ஷன் வெளியே வந்த உடன் அவரை தத்தெடுக்க பிரபல நடிகை ஒருவர் காத்திருக்கிறார் என்றும் கூறினார் ஃபாத்திமா பாபு. ஆனால் அந்த நடிகை யார் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ஃபாத்திமா பாபு, தர்ஷன் வெளியே வந்ததும் உங்களுக்கே தெரியும் என்றார்.

வேண்டிய இடத்தில் கோபம்
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் தர்ஷன், மிகவும் நேர்மையாக உள்ளார். கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்படுகிறார். கேள்வி கேட்க வேண்டி இடத்தில் கேள்வி கேட்கிறார்.

ஸ்ட்ராங்கான தர்ஷன்
வனிதா, சரவணன், கவின், சாண்டி என அனைவரையும் முகத்துக்கு நேராக கேள்வி கேட்டு அவர்களின் தவறை அப்போதே சுட்டிக்காட்டினார். இதனால் மக்களின் மனதில் ஸ்ட்ராங்காக சப்பளம் போட்டு உட்காந்துவிட்டார் தர்ஷன்.


Click it and Unblock the Notifications











