ஏற்கனவே பல பிரச்சனை.. என் புருஷன் இப்படி ஆகிட்டாரே.. கணவரின் புதிய தோற்றத்தால் ஷாக்கான இளம் மனைவி!

கோலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகர் ஒருவருக்கும் அவரின் இளம் மனைவியான இன்னொரு நடிகைக்கும் பெரிய அளவில் சண்டை வந்துள்ளது.

சென்னை: கோலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகர் ஒருவருக்கும் அவரின் இளம் மனைவியான இன்னொரு நடிகைக்கும் பெரிய அளவில் சண்டை வந்துள்ளது.

கோலிவுட்டில் சில வருடங்களுக்கு முன் அறிமுகம் ஆன கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகர் அவர். தமிழில் இவருக்கு என்று தனியாக பெண்கள் பேன்ஸ் இருக்கிறார்கள். பல வருடங்களாக பேச்சிலராக இருந்த இவர், சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த மாதங்களுக்கு முந்தால் சிங்கிள் ஆன அந்த ஹீரோ இளம் ஹீரோயின் ஒருவருடன் மிங்கிள் ஆனார். தன்னை விட பல வருடம் இளைய அந்த நடிகையை அவர் திருமணம் செய்து கொண்டார்.

எப்படி ஆனார்கள்

எப்படி ஆனார்கள்

இவர்கள் இருவரும் நடித்த ஒரு படம்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். அந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட காதல் மூலம்தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் திருமணம் ஆன சில நாட்களில் இவர்களுக்குள் நிறைய பிரச்சனை வந்தது. திருமணத்திற்கு முன் அந்த ஹீரோயின், கடவுள் நடிகரிடம் நிறைய கண்டிசன்களை போட்டு இருக்கிறார். அதில் முக்கியமான கண்டிஷன் படத்தில் தொடர்ந்து திருமணத்திற்கு பின்னும் நடிப்பேன் என்பதாகும்.

ஆனால் என்ன ஆனது

ஆனால் என்ன ஆனது

இதற்கு அந்த நடிகரும் ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால் புதிய திருப்பமாக அந்த நடிகையை இனிமேல் நடிக்க கூடாது என்று நடிகர் ஆர்டர் போட தொடங்கிவிட்டாராம். அதோடு வேறு ஹீரோக்கள் உடன் பேச கூடாது, பார்ட்டி செல்ல கூடாது என்றும் கண்டிஷன் போடுகிறாராம். இதனால் இவர்கள் உறவில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

புதிய பிரச்சனை

புதிய பிரச்சனை

இதெல்லாம் போக தற்போது புதிய பிரச்சனை ஒன்றும் இவர்களுக்கு இடையில் தோன்றி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த நடிகர் மொத்தமாக தன்னுடைய உடல் வாகை மாற்றினார். அதிக அளவில் உடற் பயிற்சி செய்து மொத்தமாக தன்னுடைய உடல் அழகை மாற்றினார். ஆனால் இவர் எடுத்துக்கொண்ட மருந்துகள் காரணமாக இவரின் உடல் மோசமானது.

முகம் என்ன ஆனது

முகம் என்ன ஆனது

மிக முக்கியமான அவரின் முகத்திலேயே இந்த மோசமான விஷயம் தெரிய தொடங்கியது.ஆம் அவரின் முகம் மிகவும் வயதான முகம் போல மாறியது. உடலும் கூட தோல் சுருங்கி, ஒரு மாதிரி விசித்திரமாக மாறினார். இதனால் அவரின் மனைவிக்கும், அவருக்கு இந்த புதிய உடற்கட்டு தொடர்பாக விவாதம் ஏற்பட்டுள்ளது.

சண்டை என்ன

சண்டை என்ன

உங்கள் உடல் நன்றாகத்தான் இருந்தது. அதை தேவை இல்லாமல் கெடுத்துக் கொண்டீர்கள். இப்போது பாருங்கள் உங்கள் உடல் மோசமாகிவிட்டது என்று கூறி இருக்கிறார்.இதனால் அந்த இளம் நடிகைக்கும், இந்த ஹீரோவிற்கு பெரிய அளவில் சண்டை வந்துள்ளது என்று கூறுகிறார்கள். ஏற்கனவே பல சண்டை வந்த இவர்கள் வாழ்க்கையில், இந்த புதிய விஷயம் பூகம்பமாக மாறியுள்ளது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X