சீமானின் முதல் மனைவி இவங்கதானா? பொண்டாட்டி பொண்டாட்டி... வீடியோ வெளியிட்ட நடிகை
சென்னை: பாஞ்சாலங்குறிச்சி, தம்பி, வீரநடை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக பிரபலம் அடைந்தவர் சீமான். பின்பு மாயாண்டி குடும்பத்தார், அமைதிப்படை 2 படங்களில் நடித்துள்ளார். பின்னர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். தமிழ் அரசியலில் அதிக இளைஞர்களை கொண்ட கட்சியின் தலைவராக இருக்கிறார். ஆனால், அவருக்கு விஜயலட்சுமி என்றால் பயம். முன்னாள் காதலி என்று கூறப்படுகிறது. தற்போது, நடிகை புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நெட்டிசன்கள் சீமான் கண்ணில் படும் வரை அதனை ஷேர் செய்து வருகின்றனர்.
தம்பி: தமிழ் சினிமாவில் வித்தியாசமான படமாக தம்பி இடம்பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் அனல் தெறிக்கும் வசனங்களும் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த படமாக இருந்தது. சாக்லேட் பாயாக இருந்த மாதவனை ஆக்சன் ஹீரோவாக மாற்றிய படம் தம்பி. இப்படம் சிறந்த வசனத்திற்காக தமிழ்நாடு ஸ்டேட் அவார்டை பெற்றார் சீமான். இப்படத்தை தொடர்ந்து வாழ்த்துகள் படம் இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றன. இதன் பிறகு படத்தை இயக்குவதை நிறுத்தி கொண்டார் சீமான்.

அண்ணன் சீமான்: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமானுக்கு தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு உள்ளது. தமிழகம் முழுவதும் அவருக்கு தம்பிகளின் படை அதிகம் உள்ளது. நடிகர்கள் விஜய், அஜித், சிம்பு, சமுத்திரக்கனி போன்றோரை செல்லமாக தம்பிகள் என்றே அழைப்பார். அதேபோன்று அவருக்கு பிடித்த இயக்குநர்களில் பாலா, வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ், அமீர் ஆகியோர் உள்ளனர்.
அரசியலுக்கு சென்றாலும் அவர் ஏறும் மேடை சினிமா மேடையாக அலங்கரிக்கும். இசைஞானி இளையராஜா குறித்து சிலாகித்து பேசி மகிழ்வார். பிடித்த வரிகளை பாட்டு பாடி எல்லோரையும் மகிழ்விப்பார். சீமான் பாடும் பாடல்கள், சொல்லும் கதைகள் வியப்பை ஏற்படுத்தும். அரசியல்வாதியாக இருந்தாலும் அவருக்குள் ஓடும் ரத்தம் சினிமா என்பதை அவ்வப்போது வெளிக்காட்டுவார்.
யார் இந்த விஜயலட்சுமி?: ப்ரண்ட்ஸ், சூரி, பூந்தோட்டம் எஸ்.மேடம், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களில் நடித்த நடிகை. இவருக்கும் நாம் தமிழர் சீமானுக்கும் என்ன உறவு என்பதை தெரிந்துகொள்வதில் தான் நெட்டிசன்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சீமான் இயக்குநராக இருந்தபோது நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், லிவிங் லைஃபில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நடிகையை சீமான் செல்லமாக பொண்டாட்டி.. பொண்டாட்டி என்று கூறும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. மாதம் ஒருமுறை சீமான் - நடிகை விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது.
திருமணம்: நாம் தமிழர் சீமான் அரசியல் பிரபலம் கொண்டவரின் மகளான கயல்விழியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனால், இந்த நடிகை விவகாரம் குறித்த கேள்விகளுக்கு சீமான் பதில் ஏதும் அளித்ததில்லை. இதுபோன்ற பெண்ணையா திருமணம் செய்வது என என் மனைவியே என்னை கலாய்த்துள்ளார் என பிரஸ் மீட்டில் சீமான் தெரிவித்திருப்பார். ஒருமுறை நடிகையை யார் என்றே தெரியாது என கூறியுள்ளார்.
வீடியோ: இத்தனை சம்பவங்கள் நடந்து ஓய்ந்தாலும் நடிகைதனது பக்கம் இருக்கும் நியாயங்களை கேள்வியாக முன்வைத்து சீமானுக்கு எதிராக வழக்கு தொடுத்தும், பிறகு வீடியோவாகவும் வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், சீமான் என்னை தப்பா பேசுவதை நிறுத்த வேண்டும். நான் திமுகவிடம் பணம் வாங்கியதை நீ பார்த்தியா, பொண்டாட்டி பொண்டாட்டி என்று என்னிடம் பம்மிய சீமானை நல்லா தெரியும். என் பாவம் உன்னை சும்மா விடாது என சாபம் விட்டு குமுறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











