அடுத்த ஜென்மத்திலேயும் இவரே கணவரா வரணும்..கணவருக்கு பாத பூஜை செய்த பிரபல நடிகை!
சென்னை : பிரபல நடிகை தனது கணவருக்கு பாத பூஜை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருசன்... என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இந்தக் காலத்தில் ஆணுக்குச் சமநிலையில் பெண்களும் இருக்கின்றனர். ஆனால் இன்றும் கணவனுக்குப் பயப்படும் மனைவியையும், மனைவிக்குப் பயப்படும் கணவனையும் பார்க்க முடிகிறது.
கணவனுக்குப் பயப்படும் மனைவியைப் பார்ப்பது இக்காலத்தில் அரிதாக இருந்தாலும், மனைவிக்குப் பயப்படும் கணவனை அனைத்து இடங்களிலும் பார்க்கமுடிகிறது. ஆனால், மார்டன் பெண்கள் என்று சொல்லிக் கொள்ளும் பிரபல நடிகையே கணவனுக்கு பாத பூஜை செய்ததை பார்த்து பல பெண்களே வாய்பிளந்த நிற்கிறார்கள்.

நடிகை பிரணிதா
கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை பிரணிதா, உதயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை தொடுத்தார். இதையடுத்து,கார்த்தியுடன் சகுனி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சூர்யாவுடன் மாஸ், ஜெய்யுடன் எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பெண் குழந்தை பிறந்தது
தமிழ் மட்டுமில்லை தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் போன வருடம் நித்தின் ராஜு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் பிரணிதா சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரின் பிறந்த நாளில் கர்ப்பாக இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து, ஜூன் மாதம் பிரணிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

பீமா அமாவாசை
இந்த நிலையில் நேற்று, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது கணவனுக்கு பாத பூஜை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். நேற்று தென்னிந்தியா முழுவதும் பீமா அமாவாசை தினம் கொண்டாடப்பட்டது. அதாவது, பார்வதி தேவிக்கு சிவபெருமான் அவருடைய பக்தியை புரிந்துகொண்டு ஆசீர்வதித்த நாள் தான் பீமா அமாவாசை தினம். இந்த தினத்தில் கணவருக்கு பாத பூஜை செய்யும் மனைவி நீண்ட ஆயுள் கூடி எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நம்பிக்கை உள்ளது.

கணவருக்கு பாதபூஜை
தென்னிந்தியாவில் உள்ள பல பெண்கள் பீமா அமாவாசை தினத்தை கொண்டாடி வரும் நிலையில் நடிகை பிரணிதாவும் தனது கணவருக்கு பாதபூஜை செய்து கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை பார்த்த பல பெண்கள் அட இப்படி ஒரு விஷயம் இருக்கான இது தெரியாம போச்சே என்று புலம்பி வருகின்றனர். அவர் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











