அடடா.. தளபதி 65 படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்.. யாருன்னு பாருங்க!

சென்னை: தளபதி 65 படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும் 65 வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாததால் தளபதி 65 என குறிப்பிடப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்கின்றனர்.

நகைச்சுவை நடிகர்

நகைச்சுவை நடிகர்

மேலும் விடிவி கணேஷும் இந்தப் படத்தின் மூலம் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இணைந்து பிரபல நகைச்சுவை நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதாவது நடிகர் யோகிபாபு இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே மெர்சல், சர்க்கார், பிகில் ஆகிய படங்களில் விஜய்யுடன் யோகி பாபு இணைந்து நடித்துள்ளார்.

4வது முறையாக

4வது முறையாக

இந்நிலையில் தளபதி 65 படத்தில் யோகி பாபு இணைந்து நடித்தால் இது அவருடைய 4வது படமாக இருக்கும். தளபதி 65 படம் ஆக்ஷன் எண்டெர்டெய்னராக இருக்கும் என தெரிகிறது. தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தேசிய விருது வின்னர்

தேசிய விருது வின்னர்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை தயாரித்து வருகிறது. தளபதி 65 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தேசிய விருது வின்னர் அன்பறிவு ஸ்டன்ட் கோரியோகிராஃப் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X