வெறித்தனம்.. வெறித்தனம்.. விஜய் பாடலுக்கு வெறித்தனமாக டிக்டாக் செய்த பிரபல இயக்குனரின் மகள்!

வெறித்தனம் பாடலுக்கு பிரபல இயக்குனர் ஒருவரின் மகள் செய்துள்ள டிக்டாக் வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.

Recommended Video

Thalapathy 64 Pooja : படத்தின் சென்னையில் இன்று படத்தின் படப்பிடிப்பு பூஜை-வீடியோ

சென்னை: வெறித்தனம் பாடலுக்கு பிரபல இயக்குனர் ஒருவரின் மகள் செய்துள்ள டிக்டாக் வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் பிகில். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தில் விஜய் கால் பந்து கோச்சாக நடித்து உள்ளார்.

மேலும் விஜய் நடித்துள்ள பிகில் படம் உலகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் தீபாவளியன்று வெளியாகும். இந்த படம் பல சாதனைகளை உடைக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார்.

விஜய் பாடல்

விஜய் பாடல்

இந்நிலையில் பிகில் தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிகமுக்கியமான படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.மேலும் தன்னுடைய சொந்த குரலில் இந்த படத்தில் "வெறித்தனம்" என்ற பாடலை பாடியுள்ளார் விஜய்.

டிக் டாக் வைரல்

டிக் டாக் வைரல்

இது இணைய தளத்தில் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முக்கியமாக சிறுவர்களை இந்த பாடல் பெரிய அளவில் கவர்ந்துள்ளது. விஜய் ரசிகர்கள் பலர் இந்த பாடலுக்கு டிக் டாக் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

இப்படியா

இதன் தொடர்ச்சியாக தற்போது இப்பாடலுக்கு பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள் டிக்டாக் செய்துள்ளார். அவர் நடித்துள்ள இந்த டிக் டாக் வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. பல பிரபலங்களை இந்த வீடியோ கவர்ந்துள்ளது.

செம்ம பாஸ்

செம்ம பாஸ்

இந்த பாடலை எழுதிய கவிஞர் விவேக் இந்த வீடியோவை ஷேர் செய்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அட பிரபு சாலமனுக்கு இவ்வளவு பெரிய பெண் குழந்தை உள்ளதா என்று பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X