பாத்ரூமில் சடலமாக கிடந்த பிரபலம்.. அதிர்ச்சியில் உறைந்த சினிமா நட்சத்திரங்கள்!
கொல்கத்தா: பிரபல பெண் ஃபேஷன் டிசைனரான ஷர்பரி தத்தா வீட்டின் கழிப்பறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்தவர் பிரபல ஃபேஷன் டிசைனர் ஷர்பரி தத்தா. இவர்க பல சினிமா படங்கங்கள், டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றிற்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ளார்.
பெங்காலி சினிமா மற்றும் டிவி நட்சத்திரங்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர். பலரின் திருமணம் உட்பட தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் உடைகளை வடிவமைத்து கொடுத்துள்ளார்.

ஷர்பரி தத்தா
இவரது மகனான அமலின் தத்தாவும் பிரபல ஃபேஷன் டிசைனராக உள்ளார். மகன் குடும்பத்துடன் தனியே வசித்து வர 63 வயதான ஷர்பரி தத்தா மட்டும் தெற்கு கொல்கத்தாவின் பிராட் தெருவில் உள்ள அவரது தனியாக வசித்து வந்துள்ளார்.

பாத்ரூமில் சடலமாக
நேற்று முழுக்க அவர் யாருடைய போன் கால்களையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகன் உட்பட உறவினர்கள் நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் பாத்ரூமில் மூச்சு பேச்சின்றி சடலமாக கிடந்துள்ளார் ஷர்பரி.

பிரேத பரிசோதனை
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார்டியாக் அரெஸ்ட்
முதற்கட்ட விசாரணையில் ஷர்பரி மரணத்தில் எந்த மர்மம்
இருப்பதாக தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். ஷர்பரி தத்தா திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

ரிஸ்வான் ரப்பாணி ஷேய்க்
ஷர்பரி தத்தாவின் திடீர் மரணம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல நடிகரான ரிஸ்வான் ரப்பாணி ஷேய்க், ஷர்பரி அக்கா ரொம்ப எளிமையானவர். சோக்கர் பாலி நிகழ்ச்சியில் என்னுடைய பர்ஃபாமன்ஸை பார்த்து பாராட்டினார், அவரது மறைவை ஏற்கமுடிவில்லை என கூறியுள்ளார்.

ரச்னா பானர்ஜி
இதேபோல் திரைப்பட நடிகையும் தீதி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான ரச்னா பானர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷர்பரியின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். தன்னுடைய மூத்த சகோதரி போன்று இருந்த ‘நீங்கள் இனி இல்லை என்று நம்ப முடியவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











