சாலை விபத்தில் 20 வயது மகனை பறிகொடுத்த பிரபல இயக்குநர்.. சோகத்தில் திரைத்துறை!
சென்னை: பிரபல இயக்குநரின் 20 வயது மகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கன்னட மற்றும் துளு பட இயக்குநர் சூர்யோதை பேரம்பள்ளி. இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.
இவருடைய 20 வயது மகன் மயூர். கல்லூரி மாணவரான மயூர் கடந்த வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

தலையில் பலத்த காயம்
அப்போது முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது அவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்தார் மயூர். இதனை தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மயூர்.

இயக்குநர் மகன் மரணம்
ஆனால் சிகிச்சை பலனின்றி மயூர் மரணமடைந்தார். அவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூர்யோதை 'Deyi Baidethi - Gejjegiri Nandanodu', என்ற துளு படத்தை இயக்கினார்.

விருதுகளை குவித்த படம்
இந்தப் படம் ரசிகர்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. சூப்பர் டூப்பர் ஹிட்டான இப்படம் மாநில அரசின் மூன்று விருதுகளை குவித்தது. இதனை தொடர்ந்து கன்னட மொழியில் சால்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார் சூர்யோதை.

சஞ்சரி விஜய்
இந்நிலையில் அவரது 20 வயது மகன் விபத்தில் அகால மரணமடைந்துள்ளார். கடந்த மாதம் தேசிய விருது வென்ற நடிகர் சஞ்சரி விஜய், சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்தார்.

மேலும் ஒரு விபத்து
இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகரும் பாஜக பிரமுகருமான ஜக்கேஷின் மகன் எத்திராஜ் விபத்தில் சிக்கினார். ஆனால் சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











