தமிழ் படமா? வில்லன் ரோலா? வேண்டவே வேண்டாம்.. தளபதி 64 வாய்ப்பை மறுத்த பிரபல ஹீரோ!

நடிகர் விஜய் நடிக்கும் 64வது படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பை பிரபல மலையாள நடிகர் ஒருவர் தவறவிட்டுவிட்டார்.

Recommended Video

Thalapathy 64 Pooja : படத்தின் சென்னையில் இன்று படத்தின் படப்பிடிப்பு பூஜை-வீடியோ

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் 64வது படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பை பிரபல மலையாள நடிகர் ஒருவர் தவறவிட்டுவிட்டார்.

தளபதி 64தான் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது.

மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு யார்

முன்பு யார்

இந்த நிலையில் ஆண்டனி வர்கீஸ் ரோலில் மலையாளத்தின் டாப் ஹீரோ டோவினோ தாமஸ் நடிப்பதாக இருந்தது. அவர் மலையாளத்தில் தற்போது மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் மலையாளத்தின் விஜய் சேதுபதி என்று இவரை அழைக்கலாம்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இதனால் இவரை தளபதி 64 படக்குழு அணுகி நடிக்க கேட்டிருக்கிறது. ஆனால் அவருக்கு வரிசையாக விஜய் சேதுபதி போலவே நிறைய படங்கள் லைனில் இருக்கிறது. அவர் வாரத்திற்கு ஒரு படம் ரிலீஸ் செய்து வருகிறார். இதனால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்கிறார்கள்.

வேறு என்ன காரணம்

வேறு என்ன காரணம்

அதேபோல் இவர் ஏற்கனவே மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தார். அந்த படத்தில் அவருக்கு பெரிதாக ரோல் இல்லை. வில்லனாக இருந்தாலும் அதில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழில் இருந்த ரசிகர்களையும் அவர் இழந்ததுதான் மிச்சம்.

இப்போது எப்படி

இப்போது எப்படி

ஆகவே மீண்டும் தமிழில் வில்லன் பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று அவர் முடிவு செய்துவிட்டாராம். அதே சமயம் கெளதம் மேனன் எடுக்கும் படம் ஒன்றில் இவர் ஹீரோவாக தமிழில் நடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X