twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் தமிழுக்கு வந்த ‘வேதம் புதிது’ தேவேந்திரன்!

    |

    சென்னை : 'மண்ணுக்குள் வைரம்', 'வேதம் புதிது', 'கனம் கோட்டார் அவர்களே', 'காலையும் நீயே மாலையும் நீயே', 'மேளம் கொட்டு தாலிக்கட்டு', 'உழைத்து வாழ வேண்டும்' உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள, இசையமைப்பாளர் 'வேதம் புதிது' தேவேந்திரன், கடந்த பத்து ஆண்டுகளாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

    இப்போது 'பச்சை விளக்கு' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்குள் என்ட்ரி கொடுக்கிறார் தேவேந்திரன். இந்தப் படத்தில் டாக்டர் மாறன், 'அம்மணி' புகழ் மகேஷ் இருவரும் நாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக புதுமுகங்கள் தீஷா, தாரா இருவரும் நடித்துள்ளனர்.

    A famous music director

    கன்னட பட உலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ரூபிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, 'மெட்ராஸ்' புகழ் நந்து, நாஞ்சில் விஜயன், க்ரிஷ், மடிப்பாக்கம் சுரேஷ், ராதா, நடன இயக்குனர் சிவசங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    A famous music director

    சாலை பாதுகாப்பு சம்பந்தமாக இந்தியாவிலேயே முதன்முதலாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை எழுதி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் டாக்டர் மாறன். பாடல்களை பழனிபாரதி, விஜய்சாகர், டாக்டர் மாறன், டாக்டர் கிருதயா ஆகியோர் எழுத, சிவசங்கர், சந்திரிக்கா புஜிதோஷ் இருவரும் நடனம் அமைத்துள்ளார். எஸ்.வி.பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். 'டேஞ்சர் மணி' சண்டைப் பயிற்சி அளிக்க, கே.நடராஜ் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    A famous music director

    படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை அருகே உள்ள பிரபலமான பல்கலைக் கழகத்திலும், திருப்போரூர், திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

    டிஜி திங் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர் சி.மணிமேகலை தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் திரைக்கு வரும் என தெரிவித்துள்ளார் இயக்குநர் டாக்டர் மாறன்.

    A famous music director

    இதுவரையில் சாலை பாதுகாப்பு பற்றி பல படங்களில் கூறப்பட்டு இருந்தாலும் , அறிமுக இயக்குனர் மாறன் "பச்சை விளக்கு" படம்
    மற்ற படங்களில் இருந்து சற்று வித்தியாசமானது என்று கூறியுள்ளார். இப்படத்தில் பலதரப்பட்ட முக்கியமான பிரச்சனைகள் குறித்து பேசப்படும் . சாலையில் ஏற்படும் விபத்துக்கள் பற்றியும் விரிவாக பேசப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி நிகழ்வு பற்றியும் இப்படத்தில் பேசப்படும் . படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை சுற்றுவட்டாரத்தை சுற்றிலும் NH 4 சாலையில் நடைபெற்றது. படத்தின்பாடல்களும் திருப்போரூர் மற்றும் திருவண்ணாமலையில் எடுக்கப்பட்டுள்ளது.

    A famous music director

    டிஜி திங் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர் சி.மணிமேகலை தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் திரைக்கு வரும் என தெரிவித்துள்ளார் இயக்குநர் டாக்டர் மாறன்.
    பல மசாலா படங்கள் வரும் காலத்தில் ஒரு சமூக அக்கறையோடு எடுக்கப்படும் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்.

    English summary
    A film based on road safety called "pachai vilaku" is going to be released by next month. This movie was directed by a new comer D. Maran. Music director Devendran has made a come back to tamil cinema through this movie pachai vilaku. He has also acted in this film. most of the shooting has taken place in tiruporur and tiruvannamalai its surrounding places.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X