போட்டோ ஷுட்டுக்காக ஜாலியாக பாட்டுப்பாடிய எஸ்பிபி.. அரிய வீடியோவை பகிர்ந்த பிரபல போட்டோகிராஃபர்!

சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தனது வாழ்க்கையில் சந்தித்தவர்களுக்கெல்லாம் வாழ்க்கையில் பரிபூரண அருளும் வாழ்க்கைக்கான மகிழ்ச்சியும் கிடைக்கும் என அவருடன் பணியாற்றிய பிரபல போட்டோகிராஃபரான ஜி வெங்கட்ராம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டபோதும் அதன் பின் விளைவுகள் காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார்.

அவரது புகழ் உடல் சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை போலீஸ் மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

நினைவலைகள்

நினைவலைகள்

அவரது மறைவால் அதிர்ச்சியடைந்துள்ள ரசிகர்கள், ஒரு இசை சகாப்தமே முடிந்துவிட்டது என கலங்கி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் எஸ்பிபியுடனான தங்களின் நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல போட்டோகிராஃபரான ஜி வெங்கட்ராம் தனது டிவிட்டர் பக்கத்தில் எஸ்பிபி குறித்து டிவிட்டியிருக்கிறார்.

கைகளை அசைத்து

கைகளை அசைத்து

மேலும் எஸ்பிபியின் வீடியோக்களையும் த்ரோபேக் செய்துள்ளார். அந்த வீடியோவில் போட்டோ ஷுட்டுக்காக எஸ்பிபி மைக்குக்கு முன்பு நின்றப்படி வெள்ளை நிற கோட் ஷுட்டில் வேடிக்கையாக கைகளை அசைத்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

பாட்டுப்பாடியப்படி போஸ்

பாட்டுப்பாடியப்படி போஸ்

செம ஜாலியாக பாட்டுப் பாடியப்படி போஸ் கொடுத்துள்ளார். அப்போது கேமராக்கள் ஃபிளாஷ் லைட்டுகளின் மூலம் அவரை தொடர்ச்சியாக படம் பிடித்துக கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் போட்டோகிராஃபர் ஜி வெங்கட்ராம்.

பாக்கியம் கிடைத்தது

மேலும் அந்த போட்டோவுக்கு இப்படி ஒரு அதிசயமான கரிஷ்மாட்டிக் எஸ்பிபி சாருடன் பணிபுரியும் எனக்கு பாக்கியம் கிடைத்தது. அவர் சந்தித்த அனைவரையும் அவரது அருளும் வாழ்க்கைக்கான மகிழ்ச்சியும் தொட்டுள்ளது. அவருடைய பொன்னான குரல் நம் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

SPB காக மருத்துவமனை செலவு குறித்து வதந்திக்கு SP Charan விளக்கம்
த்ரிஷா லைக்ஸ்

த்ரிஷா லைக்ஸ்

எஸ்பிபியின் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை ரசித்து உற்சாகமடைந்துள்ளனர். நடிகை த்ரிஷாவும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு.. ஓ மை காட் இது மிகவும் அருமையாக உள்ளது வெங்க்ஸ் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பலரும் இந்த வீடியோவை ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X