Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பிரபல இளம் டிவி நடிகர் சபரிநாத் திடீர் மரணம்.. பேட்மிண்டன் விளையாடிய போது விபரீதம்.. ரசிகர்கள் ஷாக்!
திருவனந்தபுரம்: பிரபல இளம் நடிகரான சபரி நாத் கார்டியாக் அரெஸ்ட்டால் காலமானார். அவருக்கு வயது 42.
மலையாள தொலைக்காட்சி சேனல்களில் பிரபலமாக இருந்தவர் நடிகர் சபரி நாத்.
இவர் மின்னுக்கேட்டு, அமலா மற்றும் சுவாமி அய்யப்பன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
ஆரம்பிச்சாச்சா..
ரெசார்ட்டில்
சரக்கும்
கையுமாக
பிரபல
நடிகை..
கண்டப்படி
கமெண்ட்டடிக்கும்
நெட்டிசன்ஸ்!

மனைவி 2 மகள்கள்
நடிகர் சபரி நாத் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். சமீபத்தில் தொடங்கப்பட்ட பாடாத பைங்கிளி என்ற சீரியலிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

திடீர் நெஞ்சுவலி
இந்நிலையில் நேற்று மாலை சபரி நாத் வீட்டில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அவரை குடும்பத்தினர் உடனடியாக திருவனந்தப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உயிர் பிரிந்தது
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே சபரி நாத்தின் உயிர் பிரிந்தது. சபரி நாத்தின் திடீர் மரணம் மலையாள தொலைக்காட்சி நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம்ப முடியவில்லை
பல நடிகர்கள் அவரவர் சமூக வலைதள பக்கங்களில் சபரிநாத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நீயும் ஞானும் நடிகரான ஷிஜு ஏஆர் சபரி நாத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல், இன்னும் என்னால் நம்ப முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.