நியாயமே இல்ல.. அவரும் ஷேவ் பண்ணல.. நானும் பண்ணல.. ஆனா அவரு மட்டும்.. மேடியுடன் போட்டி போட்ட ரசிகர்!
சென்னை: மாதவன் தாடியுடன் இருக்கும் போட்டோவுடன் தன்னுடைய போட்டோவை ஒப்பிட்டுள்ள ரசிகர் ஒருவர் இது நியாயமே இல்லை நொந்து போயுள்ளார்.
மேடி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் மாதவன். தமிழ் சினிமாவில் மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். எராளமான விருதுகளை குவித்துள்ளார் மாதவன்.

இறுதிச்சுற்று..
தமிழ் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவிலும் பிஸியான நடிகராக உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை கோச்சாக நடித்தார் மாதவன். அவரது கதாப்பாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார் மாதவன்.

ரசிகர்கள் ஏராளம்
இந்தப்படத்திற்கு பிலிம் ஃபேர் விருது உட்பட பல விருதுகளை குவித்தார். தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த விக்ரம் வேதா படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் மாதவனுக்கு ரசிகர்கள் காட்டிலும் ரசிகைகள் ஏராளம்.

ஊரடங்கால்..
ஏன்.. மாதவனின் சிரிப்பை பார்த்த ஆண்களே பொறாமைப் பட்ட காலமும் உண்டு.. இன்றும் மாதவனின் க்யூட்னஸை பார்த்த ஆண்கள் பொறாமை படுகிறார்கள் என்பதற்கான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தாடியுடன் போட்டோ
சலூன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஆண்கள் தாடியுடனே காட்சியளிக்கின்றனர். அதுபோல் மாதவனும் வீட்டிலேயே இருப்பதால் ஷேவ் பண்ணாமல் இருப்பதால் தாடியுடன் உள்ளார். மாதவன் தாடியுடன் இருக்கும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரசிகர் ஒருவர், தானும் தாடியுடன் உள்ள போட்டோவை ஒப்பிட்டிருக்கிறார்.
ரசிகர் ஆதங்கம்
அதில், வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருப்பதால் நானும் ஷேவ் செய்யவில்லை. மாதவனும் வீட்டில் இருப்பதால் அவரும் ஷேர் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் வாழ்க்கை நியாயமற்றது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது தாடியுடன் இருக்கும் போது மாதவன் மட்டும் இவ்வளவு ஹேன்ட்சமாக இருக்கிறார்.. நான் இல்லையே என ஆதங்கப்பட்டிருக்கிறார் அந்த ரசிகர்.
Recommended Video

அழகான ஆன்மா சகோ
ரசிகரின் இந்த ஆதங்க டிவிட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் மேடி, ஹா.. ஹா.. ஹா.. என சிரித்து நீங்கள் ஒரு அழகான ஆன்மா சகோ என டிவிட்டியிருக்கிறார். சுவாரசியமான இந்த டிவிட்டை பலரும் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











