Rajini - ரஜினியை பார்க்க இமயமலைக்கு நடந்தே சென்ற ரசிகர்.. தலைவர் செய்த நெகிழ்ச்சியான செயல்

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிகாந்த்தை பார்க்க தமிழ்நாட்டிலிருந்து ரசிகர் ஒருவர் நடந்தே இமயமலைக்கு சென்றிருக்கிறார்.

இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடலில் சூப்பர் சுப்பு எழுதியது உசுர கொடுக்க கோடி பேரு இருக்கிறார்கள் அவருக்காக. அவரது எளிமை, பேச்சு, நடை, உடை என அத்தனையையும் பலர் ஃபாலோ செய்துவருகின்றனர். அவர் கடைசியாக தர்பார், அண்ணாத்த படங்கள் ரஜினிக்கு சரியான வெற்றியை பெற்றுத் தரவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தடுமாறிக்கொண்டிருப்பதாக பலர் கூறுவர்.

A fan from Tamil Nadu has walked to the Himalayas to see Rajinikanth.

ஜெயிலர்: இப்படிப்பட்ட சூழலில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். கடந்த 10ஆம் தேதி ரிலீஸான அந்தப் படம் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ரஜினி இதன் மூலம் கம்பேக் கொடுத்துவிட்டார் என்றும் அவரது ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். இதுவரை படமானது 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.

உலகமே கொண்டாடுது ஆனா ரஜினியோ: ஜெயிலர் படத்தை உலகத்தில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் கொண்டாடிவருகின்றனர். ஆனால் ரஜினிகாந்த்தோ படம் ரிலீஸாவதற்கு சில நாட்களுக்கு முன்பு இமயமலைக்கு சென்றுவிட்டார். வழக்கமாக அவர் செல்லும் இடம் என்றாலும் இந்த முறை கொஞ்சம் ஸ்பெஷலாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் அங்கு செல்லவில்லை.

அது மட்டும் காரணம் இல்லை: நான்கு ஆண்டுகள் கழித்து செல்வதால் மட்டும் அவரது இந்த இமயமலை பயணம் ஸ்பெஷலாக பார்க்கப்படவில்லை. இதுவரை தன்னுடைய படத்தின் ரிலிஸுக்கு முன்னர் இமயமலைக்கு சென்றிருக்கிறாரோ அந்தப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவும் இந்தப் பயணத்தை அவர்கள் ஸ்பெஷலாக பார்த்தனர்.

இமயமலையில் ரஜினி: இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த் அங்கு இருக்கு ஆன்மீக தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவருகிறார். ரஜினி செல்லும் இடமெல்லாம் அவருக்கு அங்குள்ள பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்துவருகின்றனர். அதேபோல் அவரது ஃபேவரைட்டான பாபாஜி குகைக்கு சென்று தியானமும் செய்தார். அதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

ரஜினியின் நெகிழ்ச்சியான செயல்: இந்நிலையில் இமயமலையில் நடந்த ஒரு சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது ரஜினிகாந்த் பாபாஜி குகைக்கு செல்லும் வழியில் 55 வயதுடைய ஒருவரை பார்த்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்காரர் என்பதும்; தன்னை பார்ப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து நடந்தே இமயமலைக்கு வந்திருப்பதாகவும் ரஜினி தெரிந்துகொண்டார். இதனால் நெகிழ்ச்சியடைந்த அவர்; அந்த பக்தருக்கு பண உதவியையும், இமயமலையில் தங்குவதற்கு ஒரு இடத்தையும் ஏற்பாடு செய்துகொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X