விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன்.. நம்ம மணிகண்டனுக்கு மக்கள் கொடுத்த பட்டத்தை பார்த்தீங்களா?

சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது அனைவராலும் அறியப்படும் நடிகராக இருக்கிறார் மணிகண்டன். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் சூப்பர் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல் இதற்கு முன்னதாக அவர் நடித்த குட் நைட், லவ்வர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. இந்தச் சூழலில் மணிகண்டனுக்கு ரசிகர் ஒருவர் பட்டம் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோ ஒன்றில் போட்டியாளராக பங்கேற்று ரன்னர் அப்பாக வந்தவர் மணிகண்டன். அதனையடுத்து ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அடிப்படையிலேயே சினிமா ஆர்வம் இருந்த அவர்; கதைகளும் எழுதக்கூடியவர். அந்தவகையில் பீட்சா 2 படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் படத்தில் முக்கியமான ரோலில் நடித்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. பிறகு காதலும் கடந்துபோகும் படத்தில் சின்ன ரோலில் நடித்தாலும் அவருக்கான அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

manikandan kudumbasthan

வசனகர்த்தா: நடிகராக மட்டுமின்றி வசனகர்த்தாவாகவும் கலக்கியவர் மணிகண்டன். விஜய் சேதுபதி, மாதவன் நடித்து மெகா ஹிட்டான விக்ரம் வேதா படத்துக்கு மணிகண்டன்தான் வசனகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விஸ்வாசம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களுக்கும் வசனங்கள் எழுதியிருக்கிறார் அவர். அதுமட்டுமின்றி நரை எழுந்தும் சுயசரிதம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்: நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என பன்முகங்களை கொண்ட மணிகண்டனுக்கு இன்னொரு திறமையும். அதாவது அவர் மிகச்சிறப்பாக மிமிக்ரி செய்யக்கூடியவர். ஒரு நிகழ்ச்சியில்கூட அஜித்,ரகுவரன் ஆகியோரின் குரல்களில் கால வேறுபாட்டோடு பேசியிருந்த வீடியோ பயங்கரமாக ட்ரெண்டானது. தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு பிறகு மணிகண்டன் மிகச்சிறப்பாக மிமிக்ரி செய்கிறார் என்று ரசிகர்கள் அடிக்கடி கூறுவார்கள். தற்போது பிஸியான நடிகராக வலம்வந்துகொண்டிருக்கிறார்.

வரிசையாக ஹிட்டுகள்: ஏகப்பட்ட திறமைகளை கொண்டிருக்கும் மணிகண்டன் இப்போது பரபரப்பான நடிகர். அவரது கதை தேர்வுகள் அனைத்துமே நன்றாக இருக்கிறது என்று இன்டஸ்ட்ரியில் சொல்வதுண்டு. அந்தவகையில் அவர் கடைசியாக நடித்த லவ்வர், குட் நைட் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டடித்திருந்தன. தற்போது அவர் குடும்பஸ்தன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். நக்கலைட்ஸ் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியிருக்கும் இந்தப் படம் நேற்று வெளியானது. இப்படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்துவருகிறது.

மணிகண்டனுக்கு பட்டம்: இந்நிலையில் குடும்பஸ்தன் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் மணிகண்டனை அருகில் வைத்துக்கொண்டு, "விஜய் சேதுபதிக்கு எப்படி மக்கள் செல்வன் என்ற பட்டம் இருக்கிறதோ அதேபோல் மணிகண்டனை இனி மிடில் கிளாஸ் மணிகண்டன் என்றுதான் அழைக்க வேண்டும். அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். அந்த அளவுக்கு குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்" என்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X