Pepsi Uma - இப்படியும் ஒரு ரசிகையா?.. பெப்சி உமாவுக்கு சுண்டு விரல் பார்சல்.. வெளியான அதிர்ச்சி சம்பவம்
சென்னை: Pepsi Uma (பெப்சி உமா) சின்னத்திரையில் பிரபலமாக இருந்த பெப்சி உமாவுக்கு ரசிகை ஒருவர் சுண்டு விரலை பார்சல் அனுப்பிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
வெள்ளித்திரை எப்படி ரசிகர்களிடம் பயங்கரமாக கனெக்ட் ஆகியிருக்கிறதோ அதற்கு கொஞ்சமும் சளைத்ததில்லை சின்னத்திரை. சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு பிரபலமான நடிகர்கள், நடிகைகள் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். சந்தானம், சிவகார்த்திகேயன், யோகி பாபு, ப்ரியா பவானி ஷங்கர் என அந்த லிஸ்ட் ரொம்பவே பெரிது.

சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார்: இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் பெப்சி உமா. தனியார் தொலைக்காட்சியில் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் வெகு பிரபலமானார் உமா. அந்த நிகழ்ச்சியாலேயே அவர் பெப்சி உமா என்று அழைக்கப்பட்டார். அவர் பேசும் தமிழ், அணிந்த உடைகள் என அத்தனையும் படு ஃபேமஸ். அவரை சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும் சமீபமாக அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சினிமாவுக்கு நோ: சினிமா வாய்ப்பு கிடைத்தால் பெரும்பாலும் யாருமே நோ சொல்லாமாட்டார்கள். அப்படித்தான் உமாவுக்கும் சினிமா வாய்ப்புகள் தானாக வந்தன. அதுவும் சாதாரண ஹீரோக்களின் படங்கள் இல்லை ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்ற டாப் ஹீரோக்களின் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவரோ அனைத்துக்கும் நோ சொல்லிவிட்டார். ரஜினி, கமல் மட்டுமின்றி ஷாருக்கானுடனான பட வாய்ப்பையும் அவர் நிராகரித்துவிட்டார். அதேபோல் சச்சின் டெண்டுல்கருடன் ஒரு விளம்பர படத்திற்கும் நோ சொல்லியிருக்கிறார் அவர்.
ஒதுங்கிய உமா: இப்படி உச்சக்கட்ட பீக்கில் இருந்தபோதே பெப்சி உமா திடீரென காணாமல் போனார். அதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களே என்று கூறப்படுகிறது. அவர் பல வருடங்கள் ஆன் ஸ்க்ரீனில் வராமல் இருந்தாலும் 90ஸ் கிட்ஸ்கள் அவரை இன்னும் மறக்கவில்லை. அதற்கு உதாரணம்தான் அவர் சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எழுந்த அப்ளாஸுகள்.
சுண்டு விரல் அனுப்பிய ரசிகை: பெப்சி உமா மீண்டும் சின்னத்திரையில் எண்ட்ரி தருவார் என்றே கருதப்படுகிறது. இந்த சூழலில் அவருக்கு ஒரு ரசிகை அனுப்பிய பார்சல் குறித்து தெரியவந்திருக்கிறது. அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, "ஒருநாள் எனக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அதில் ஒரு சுண்டு விரல் இருந்தது. அதனை ஒரு ரசிகை அனுப்பி வைத்திருக்கிறார். உடனே அந்த ரசிகையை தொடர்புகொண்டு நான் கடிந்துகொண்டேன். அது எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது" என்றார்.


Click it and Unblock the Notifications