எங்க சாமி எடப்பாடிய விட்டுடீங்களே.. அவரு மட்டும் என்ன தக்காளி தொக்கா
சென்னை: தமிழ் படம் 2 பாடலில் எங்க சாமி எடப்பாடியை மறந்துவிட்டீர்களே என்று படக்குழுவினரிடம் ஒருவர் கேட்டுள்ளார்.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள தமிழ் படம் 2 பாடல் வீடியோ நேற்று மாலை வெளியிடப்பட்டது. சிவாவின் அறிமுக பாடல் சுனாமியின் பினாமியே என்று துவங்கியது.
பாடலில் திரைத்துறையினர், அரசியல்வாதிகள் என்று யாரையும் விட்டு வைக்காமல் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
தியானம்
பீச்சில் தியானம் பண்ண மாட்டேன் என்று ஒரு வரியை வைத்து துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை கலாய்த்துள்ளனர். ஏற்கனவே போஸ்டரிலும் சிவா சமாதியில் தியானம் செய்வது போன்று நடித்து ஓ.பி.எஸ்.ஸை வாரி இருந்தார்கள்.

முதல்வர்
டீஸரில் கூட ஓ.பி.எஸ். அழுது கொண்டே பதவியேற்றதை கலாய்த்திருந்தார்கள். இந்த பாடல் வீடியோவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கலாய்ப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
எங்கப்பா?
எங்க சாமி எடப்பாடிய விட்டுடீங்களே.. அவரு மட்டும் என்ன தக்காளி தொக்கா😂😂 என்று ஒருவர் படக்குழுவினரிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். அதை பார்த்த தயாரிப்பாளர் இயக்குனர் அமுதனிடம் இது குறித்து கேட்டார்.
அமுதன்
தயாரிப்பாளரின் ட்வீட்டை பார்த்த இயக்குனர் அமுதன், உனக்கு தெரியாததில்ல...நம்ம படத்துல... என்று மட்டும் பதில் அளித்து ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டுள்ளார்.
ஆவல்
டீஸர், பாடல், போஸ்டர்களை பார்த்தால் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. எப்ப தான்யா படத்தை ரிலீஸ் பண்ணுவீங்க?


Click it and Unblock the Notifications











