ஜாதிய விட்டு வெளிய வந்து தொலைங்கபா.. ரசிகரின் பதிவுக்கு நச்சுனு பதிலடி கொடுத்த அசோக் செல்வன்!

சென்னை: ஜனவரி 25 ஆம் தேதி அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பலர் சாதி அரசியல் படம் என விமர்சித்து வரும் நிலையில், ரசிகர் ஒருவரின் பதிவுக்கு அசோக் செல்வன் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா. ரஞ்சித், தயாரிப்பாளராகவும் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். இவர் இயக்கும் படத்திலும் தயாரிக்கும் படங்களிலும், சமூக நீதி பேசும் படங்களாகவே இருக்கும். அந்த வகையில், பா. ரஞ்சித்தின், நீலம் ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகும் படங்களும் சமூக பிரச்சனைகள் பேசும் படமாக இருக்கும்.

A Fan teased blue star movie, ashok selvan replied

ப்ளூ ஸ்டார்: அந்த வகையில் தற்போது நீலம் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் ப்ளூ ஸ்டார் படம் வெளியாகியுள்ளது. அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படத்தினை அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியுள்ளார். கடந்த வாரம் வெளியான 'ப்ளூ ஸ்டார்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அரசியல் படம் இல்லை: இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில், பா ரஞ்சித், அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு பாக்யராஜ்,இயக்குநர் ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அதில் பேசிய அசோக் செல்வன், இந்த மாதிரியான படங்கள் நடிக்கத்தான் சினிமாவிற்கு வந்தேன். ஒரு படம் வெறும் வெற்றிப்படமாக அல்லாமல், ஏதாவது ஒரு கருத்தை செல்லும் படமாக இருக்க வேண்டும், ப்ளூ ஸ்டார் படத்தை அரசியல் படமா என்று கேட்டால் இல்லை என்று தான் கூறுவேன் என்று கூறியிருந்தார்.

ஜாதியை விட்டு வெளியே வாங்கப்பா: இந்நிலையில், ப்ளூ ஸ்டார் படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ஜாதிய விட்டு கொஞ்சம் வெளிய வந்து தொலைங்கபா.. அது தானா மாறுது, சும்மா அதையே நோண்டிட்டு இருக்காதீங்க. ஓ மை கடவுளே மாதிரி படம் பண்ணுங்க என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு, சரியான பதிலடி கொடுத்துள்ள அசோக் செல்வன் , ஓ மை கடவுளே படத்தை பார்த்ததற்கு மிக்க நன்றி. ஆனால், இந்த படத்தை பற்றி இப்படி யூகம் செய்யும் முன்னாள் நீங்கள் படத்தை பார்க்க வேண்டும் என்று நான் சிபாரிசு செய்கிறேன். இந்த உலகத்தின் அமைதிக்கு ஒற்றுமை தான் ஒரே வழி. நீங்களும் இதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X