Don't Miss!
- Finance
இனி பான் கார்டு போதும்.. எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்.. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு!
- Automobiles
நேபாளத்தில் நம்ம ஊர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!! விலைகளை மட்டும் பார்த்துடாதீங்க... இங்கு எவ்வளவோ பரவாயில்லை
- News
"முளைத்த முடிச்சு".. அந்த பேரே வரலியே.. டிடிவி தினகரன் யாரை சொல்றாரு.. அடடே.. ஓபிஎஸ்ஸூக்கு செம குஷி
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விபரீதமான கொண்டாட்டம்..துணிவு படம் பார்த்த உற்சாகம்..லாரி மீது டான்ஸ்..தவறிவிழுந்து உயிரிழப்பு!
சென்னை : அஜித்தின் துணிவு படத்தைப்பார்த்த உற்சாகத்தில் லாரியின் மீது ஏறி நடனமாடிய அஜித் ரசிகர் ஒருவர் தவறிவிழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து இருக்கும் படம் துணிவு. இத்திரைப்படத்தில், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
துணிவு திரைப்படம் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு வெளியான நிலையில்,அஜித்தின் ரசிகர்கள் படத்தை திருவிழாபோல கொண்டாடி வருகின்றனர்.
என்ன
ஒரு
அராஜகம்..
போலீஸ்காரரையே
எதிர்த்து
தள்ளிய
அஜித்
ரசிகர்கள்..
துணிவு
FDFS
சேட்டைகள்!

அஜித்தின் துணிவு
அஜித் எச்வினோத்தின் மூன்றாவது முறையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது முதலே அஜித்தின் ரசிகர்கள் அலப்பறை கொடுக்கத் தொடங்கினார். அதுவும் விஜய்யின் வாரிசு படத்துடன் துணிவு மோத போகிறது என்று தெரிந்ததும் ரசிகர்கள் வாரிசா...துணிவா...யாரு என்று மோதி பார்த்துவிடுமோ என்ற ரேஞ்சுக்கு சோஷியல் மீடியாவை திணறவிட்டனர்.

வாரிசு VS துணிவு
துணிவு திரைப்படம் ஜனவரி 11ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வாரிசு திரைப்படம் ஜனவரி 12ந் தேதி வெளியாகும் என்று பரவலாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், வாரிசு படக்குழு ஜனவரி 11ந் தேதியேவெளியாகும் என அதிரடியான அறிவிப்பை வெளியிட்டது. ஜில்லா, வீரம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட8 வருடங்களுக்கு பிறகு தல, தளபதி படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளன.

கொண்டாடிய ரசிகர்கள்
இரண்டு படங்களும் ஒரே நாளின் வெளியானதால், இரண்டு ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவு 1 மணிக்கு அஜித்தின் துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதனை ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினார்கள்.

பேனர் கிழிப்பு...போலீஸ் தடியடி
ரோகிணி திரையரங்கின்முன் வைக்கப்பட்டிருந்த வாரிசு படத்தின் பேனர்களை, அஜித் ரசிகர்கள் கிழித்தனர். அதே போல் துணிவு பேனரை விஜய் ரசிகர்கள் கிழித்தால் அப்பகுதியில் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கட்டுப்படுத்தினர்.மேலும், ரோகிணி தியேட்டரின் கண்ணாடியை விஜய், அஜித் ரசிகர்கள் அடித்து உடைத்தனர். இதனால்,அப்பகுதியே கலவரபூமியாக இருந்தது.

விபரீதமான கொண்டாட்டம்
இந்நிலையில் துணிவு படம் பார்த்து மிகுந்த உற்சாகத்தில்ர இருந்த அஜித் ரசிகர் ஒருவர் ரோகினி திரையரங்கு முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நடனமாடி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே கிழுந்தார். இதில் அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.