"என் பொண்ண என்ன பண்ண“.. துரந்தர் 2 கொடுத்த தைரியம்.. சரமாரியாக தாக்கிய தந்தை!

சென்னை: ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்பீர் சிங் நடித்த திரைப்படம் கடந்த மார்ச் 19ந் தேதி வெளியாகி வசூலை அள்ளிக்குவித்து வருகிறது. இணையத்தில் எங்கு பார்த்தாலும் இந்த படத்தின் காட்சி பற்றியும், படம் பற்றியும் பேச்சாக இருக்கும் போது, உத்தரபிரதேசத்தில் இந்த படத்தை குடும்பத்தோடு பார்த்த ஒருவர், தன் மகள் மீது கை வைத்தவரை நபரை பொளத்து கட்டியுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ராவத்பூரில் உள்ள குருதேவ் திரையரங்கில் அண்மையில் வெளியாகி வெற்றி கரமாக ஓடிக்கொண்டு இருக்கும் துரந்தர் 2 திரைப்படத்தை பார்ப்பதற்கான ஒரு பெண் தனது தந்தையுடன் வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் பக்கத்து இருக்கில் இருந்த இளைஞர் ஒருவர், படம் ஓடிக்கொண்டு இருக்கும் போதே, அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவும், பாலியல் சீண்டல்களையும் செய்துள்ளார். படம் முடிந்ததும் இந்த விஷயத்தை அந்த பெண் தனது தந்தையிடம் சொல்லி அழுதுள்ளார்.

Durandhar 2 box office 2

தர்ம அடி: இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தந்தை, அந்த நபர் தியேட்டரை விட்டு வெளியே வந்த போது கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார். மேலும், என் மகள் மீதா கைவெச்ச என சொல்லி சொல்லியே அடித்துள்ளார். இதையடுத்து, அந்த நபரை கான்பூரிர் காவல்நிலையத்தில் ஒப்படைந்துள்ளார். மகளுக்காக இளைஞரை தந்தை தாக்கிய வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் பெண் மீது கை வைத்தால் இப்படித்தான் தர்ம அடி தரவேண்டும் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வசூல் சாதனை: கடந்த ஆண்டு துரந்தர் படத்தின் முதல்பாகம் வெளியாகி ரூ.1300 கோடியை வசூலித்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகி 6 நாட்களிலேயே உலக அளவில் ரூ. 919 கோடியை வசூலித்துள்ளது. ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1, Chhaava படங்களின் சாதனை இப்படம் முறியடித்துள்ளது. துரந்தர் 2 திரைப்படம் விரைவில் ரூ.1000 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X