தீமைக்கும், நன்மைக்கும் நடக்கும் மோதல்.. அறிவியல் சஸ்பென்ஸ் படமாக உருவாகும் ‘அனுநாகி’!
மிக பிரமாண்டமாக உருவாகிறது அனுநாகி என்ற படம்.
சென்னை: மிக பிரமாண்ட முறையில் தயாராக உள்ள "அனுநாகி" படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படத்திற்கு வசனம் எழுதியவர் ஆர்.பி.பாலா. 'அகோரி' என்கிற படத்தை எடுத்து முடித்துள்ள இவர், அடுத்ததாக 'அனுநாகி ' என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.

தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் படத்தின் கதைக்களம். இதனை அறிவியல் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து த்ரில்லர் படமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் நட்பு, காதல், அன்பு, காமெடி பக்தி, கிராபிக்ஸ், சண்டை காட்சிகள் என அனைவரையும் கவரும் அம்சங்கள் அனைத்தும் இருக்குமாம்.
ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் மைம்கோபி, ரியாஸ்கான், தமிழ் ,தெலுங்கு , இந்தியில் பிரபலமான 'காலா' படப்புகழ் ரவிகாலே என மூன்று வில்லன்கள் நடிக்கின்றனர். 'ராட்சசன் 'பட வில்லன் சரவணன், ராஜா 'ரங்குஸ்கி' விஜயசத்யா,ஆதவ்,'தொடரி 'ராஜகோபால், ரியமிகா, சம்யுக்தா, ஆங்கிலோ இந்தியன் ரிச்சர்ட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கில் முக்கியமான நடிகர் ஒருவர் ரசிகர்கள் எதிர்பார்க்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலாவுடன் ராஜ் பிலிம்ஸ் அறந்தை.கே ராஜகோபால் இணைந்து 'அனுநாகி' படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆர். பி.பாலா எழுத அறிமுக இயக்குநர் ஜெகதீஷ். டி படத்தை இயக்குகிறார்.
மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











