ரஜினி -ராஜ்பகதூர் நட்பைச் சொல்லும் படம் ‘ஒரு வழிப் பாதை’... விரைவில் ரிலீஸ்

சென்னை: விரைவில் ரிலீசாக உள்ள 'ஒன் வே' என்ற கன்னடப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், அவரது நீண்ட நாள் நண்பரான ராஜ்பகதூருக்கும் இடையேயான நட்பை மையமாக வைத்து உருவாக்கப் பட்டுள்ளதாம்.

இப்படம் தமிழிலும் 'ஒரு வழி சாலை' என்ற பெயரில் ரிலீசாகிறது.

இந்த படத்தில் ரஜினியின் கேரக்டரில் யார் நடிக்கிறார்கள் என்பதை ரகசியமாக வைத்திருக்கும் படக்குழுவினர் , நண்பராக ராஞ் பகதூரே நடிப்பதாகத் தெரிவித்துள்ளனர். ராஜ்பகதூர் ஏற்கனவே ரஜினி படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படம் தொடர்பாக ராஜ்பகதூர் கூறியதாவது :-

ரஜினியின் சம்மதம்...

ரஜினியின் சம்மதம்...

இப்படி ஒரு படத்தை எடுக்கப் போகிறோம் என்று ரஜினிகாந்திடம் சொன்னதுமே அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டார்.

சேர்ந்து பார்க்கலாம்...

சேர்ந்து பார்க்கலாம்...

அவர் இந்த படத்தைப் பாரக்க மிகவும் ஆர்வமாக உள்ளார். படம் வெளியானதும் நாம் இருவரும் சேர்ந்து படத்தைப் பார்க்கலாம் என ரஜினி சொன்னார்' எனத் தெரிவித்தார்.

நட்பைச் சொல்லும் படம்....

நட்பைச் சொல்லும் படம்....

இப்படத்தில் ரஜினியைப் பற்றிய புகைப்படங்களோ, அவர் சம்பந்தமான எந்தவித காட்சிகளோ இடம் பெறவில்லையாம். ஆனால், ரஜினி-ராஜ்பகதூருக்கு இடைப்பட்ட நீண்டகால நட்பை அழகாக படமாக்கியிருக்கிறார்களாம்.

சஸ்பென்ஸ்...

சஸ்பென்ஸ்...

ருஷி என்பவர் இயக்கத்தில் இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. திரைக்கு வந்த பிறகு தான் ரஜினி கேரக்டரில் நடித்துள்ள நடிகர் யார் என்ற சஸ்பென்ஸ் உடையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ஏற்கனவே, ரஜினிகாந்த் நடிகராக நடித்து பசுபதி அவரது பால்ய நண்பனாக நடித்த குசேலன் திரைப்படம் அவ்வளவாகப் பேசப் படவில்லை. இருப்பினும் இப்புதிய படத்தை ராஜ் பகதூர் அதிகமாக நம்பியுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X