மலையாளத்தில் படமாகிறது சில்க்கின் நிஜக் கதை!.. ரிச்சாவிடம் பேச்சுவார்த்தை!

By Sudha

சில்க் ஸ்மிதாவின் கதையைத் தழுவி தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை எடுத்தார்கள். இப்போது அதை தமிழ், கன்னடம், பெங்காலி என ஒவ்வொரு மொழியாக ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் சில்க்கின் நிஜக் கதையை நாங்கள் படமாக்கப் போகிறோம் என்று கூறி மலையாளத்தில் சிலர் கிளம்பியுள்ளனர்.

புரொபைல் என்று இப்படத்திற்கு இப்போதைக்குப் பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் கதை சில்க் ஸ்மிதாவின் நிஜக் கதைதான் என்று பகிரங்கமாகவே கூறுகிறார்கள்.

விஜயலட்சுமி எப்படி சில்க் ஸ்மிதாவாக மாறினார், எப்படி தென்னிந்தியத் திரையுலகை தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும் அரசாண்டார் என்பதை இன்ச் பை இன்ச்சாக சொல்லப் போவதாக கூறுகிறார்கள்.

இதுகுறித்து தயாரிப்புப் பிரிவைச் சேர்ந்த சிலர் கூறுகையில், சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்தியவர் ஆண்டனி ஈஸ்ட்மேன். அவர்தான் தனது இணையைத் தேடி படத்தின் மூலம் சில்க்கை மலையாளத்தில் நடிகையாக்கினார். அவரே இப்படத்திற்கும் கதை எழுதப் போகிறார்.

படத்தின் திரைக்கதையை காலூர் டென்னிஸ் கவனிப்பார். இவர் சில்க்கின் 15 படங்களுக்கு திரைக்கதை அமைத்தவர் ஆவார். அனில் படத்தை இயக்குவார் என்றனர்.

இருப்பினும் இப்படம் குறித்து கருத்து தெரிவிக்க காலூர் டென்னிஸ் மறுத்து விட்டார். அவர் கூறுகையில், ஒரு நடிகையின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்தின் கதைக்கு நான் திரைக்கதை அமைக்கிறேன். அவ்வளவுதான் இப்போதைக்கு கூற முடியும் என்றார்.

சில்க் ஸ்மிதாவின் நிஜக் கதை படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கப் போவதாக ஒரு தகவல் கூறுகிறது.

சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் நடிக்க ரிச்சா கங்கோபாத்யாயாவை அணுகியுள்ளனராம். இவர் மயக்கம் என்ன, ஒஸ்தி ஆகிய இரு தோல்விப் படங்களில் நடித்தவர். இப்போது தமிழில் பெரிய அளவில் பேசப்படாதவர். இந்த நிலையில் சில்க்கின் நிஜமான கதையில் நடிக்க அவரைத் தேடிப் போயுள்ளனர்.

பார்க்கலாம், இந்த சில்க் கதை என்ன சொல்லப் போகிறது என்பதை...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X