twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டெல்லி மாணவியின் பலாத்கார கொடூரம் திரைப்படமானது... ஜன. 26ல் வெளியீடு!

    By Mayura Akilan
    |

    Freedom
    சென்னை: நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் 'பிரீடம்' என்ற பெயரில் படமாகி உள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 26ல் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியை சீரழித்த குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றக் கோரி ஏராளமான மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் டெல்லியில் பல போராட்டங்களை நடத்தின.

    இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து சினிமா தயாரிக்கப்பட்டுள்ளது.

    ஒயிட் ஆப்பிள் சினிமா நிறுவனம் இதை தயாரித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியாக ரேவதி என்கிற ரே நடித்துள்ளார். மாணவியின் மரணத்தை ஒட்டி அமிதாப்பச்சன் எழுதிய கவிதையை இதில் பாடலாக்கி இருக்கிறார்கள்.

    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை டான் கவுதம் இயக்குகிறார். பாகிஸ்தான் இசை அமைப்பாளர் குலாம் அலி இசை அமைத்துள்ளார். பின்னணி இசை அனிருத். ஜனவரி 26ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

    English summary
    A film has been maded in Tamil, Hindi and Telugu based on Delhi gang rape incident.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X