கணவன், மனைவி உறவு... 'அதையும் தாண்டி புனிதமானது'!
கணவன், மனைவி உறவை பற்றி பேசும் படம் 'அதையும் தாண்டி புனிதமானது'.
சென்னை: கணவன், மனைவி உறவை பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது ' என்ற திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
வேல்ஸ் மூவீஸ் பேனரில் திரு.பழனிவேல் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சினிமா மேல் தணியாத ஆசைகொண்ட, சமூகத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் சிலர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள், விவசாயிகள் சிலரும் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஆர்.வெங்கட்டரமணன். இவர் 'அப்பா ..வேணாம்ப்பா..' என்ற சமூகத்தின் நலன் சார்ந்த திரைப்படத்தை இயக்கியவர்.
இந்த படம் கணவன், மனைவிக்கு நடுவில் இருக்கும் உறவு பற்றி பேகிறது. படம் குறித்து இயக்குனர் ஆர்.வெங்கட்ரமணன் கூறியதாவது, "இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது. நாகரிகத்தின் உச்சத்தில் ஆணும், பெண்ணும் நட்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஆண், பெண் உறவுகள் தவறாகப்போனால் குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்பதை பற்றி சொல்லியுள்ளோம்" என்றார்.

புதுமுகங்கள் ஜெய், கெளதம், வீன்ஷெட்டி, ஹேமா, சஞ்சனா போன்றோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வேதா செல்வம் ஒளிப்பதிவாளராகவும், ராஜேஷ்கண்ணன் எடிட்டராகவும் , வி.கே.கண்ணன் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த திரைப்படத்தின் பாடல்களை வைரபாரதி ,வெங்கடசுப்பு, நாக முருகேசன் எழுதி உள்ளனர்.
இந்த திரைப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











