லுங்கி டான்சைத் தொடர்ந்து ரஜினி வாழ்க்கையை படமாக்குகிறது பாலிவுட்...
மும்பை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'சூப்பர்ஸ்டாரு யார்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்..' என்ற பாடல் வரிகளை உண்மை என நிரூபிப்பது போல ரஜினியின் புகழ் எட்டுத் திக்கும் பரவிக் கிடக்கிறது.
அடிமட்ட நிலையிலிருந்து பல்வேறு சோதனைகளைத் தாண்டி சாதனை செய்தவர் ரஜினி. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ரஜினிக்கு மரியாதை செய்யும் விதமாக லுங்கி டான்ஸ் ஆடியிருந்தார் ஷாரூக்கான்.
இந்நிலையில் தற்போது ரஜினியின் வாழ்க்கையை சினிமா படமாக தயாரிக்க பாலிவுட் தயாராகி விட்டது.

நானே ரஜினிகாந்த்...
இந்த படத்துக்கு இந்தியில் மை ஹோன் ரஜினி காந்த் என்றும் தமிழில் நானே ரஜினி காந்த் என்றும், பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.

ரஜினி வேடத்தில் ஆதித்யா...
இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிறது. இதில் ரஜினி வேடத்தில் ஆதித்யா மேனன் நடிக்கிறார். இவர் பிரபல வில்லன் நடிகர் ஆவார். இவர் தமிழில் வில்லு, பில்லா, அசல், சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கிலும் முன்னணி நடிகராக உள்ளார்.

ரஜினிக்கு அர்ப்பணம்...
ரஜினியாக நடிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பு பற்றி ஆதித்யா மேனன் கூறும் போது, ‘ரஜினி வேடத்தில் இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அபூர்வமான அரிய வாய்ப்பு என்றார். இந்த படத்தை ரஜினிக்கு அர்ப்பணிக்கிறோம்' என்றார்.

பைசல்பை இயக்கம்...
இவர் தவிர கவிதா, ராஜேஷ்யாம், மான் ராம்கோ உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். வர்ஷா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டைரக்டர் பைசல்பை இயக்குகிறார்.

சாதனைப் பயணம்...
இப்படத்தில் ரஜினி பஸ் கண்டக்டராக இருந்து சினிமாவில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் ஆன கதை காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும், ரஜினியின் இமயமலை பயணம் ஆன்மீக தொடர்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் படத்தில் இடம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











