பிகில் ஃபீவர் பிகின்ஸ் - ப்ரியா அட்லீ புரமோசன்

Recommended Video

Bigil Vijay fans : அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்-வீடியோ

சென்னை: பிகில் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இப்படத்தை இயக்கிய அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீக்கு தயாரிப்பு நிறுவனம், பிகில் படம் ஒட்டப்பட்ட போன் கவர்கள், சட்டைகள், கார்டுகள் ஆகியவற்றை பரிசாக கொடுத்துள்ளது. இதனை ப்ரியா அட்லீயும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகிறது. ஏ.ஜி.எஸ் கல்பாத்தி நிறுவனத்தினர் இப்படத்தை தயாரித்து உள்ளனர். படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

A.G.S Productions given Bigil Gift Boxes to Priya Atlee

பிகில் படம் சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப்பிரம்மாண்டமாய் உருவாகி உள்ளது. இப்படத்தில் தளபதி விஜய் ராயப்பன், மைக்கல் பிகில் என மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து மிரட்டியிருக்கிறார். விஜய்யுடன் நயன்தாரா, யோகிபாபு, கதிர், இந்துஜா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை இயக்கியிருப்பவர் அட்லீ. இவருடைய மனைவி ப்ரியா அட்லீக்கு தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் சார்பில் பிகில் படம் ஒட்டப்பட்ட போன் கவர்கள், சட்டைகள், கார்டுகள் ஆகியவை கிப்ட்டாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்து பிகில் ஃபீவர் பிகின்ஸ் என்று கூறியிருக்கிறார் ப்ரியா அட்லீ.

விஜய் டிவியின் கனா கானும் காலங்களில் அறிமுகமான ப்ரியா அட்லீ அதற்கு பின்னர், பல குறும்படங்களில் நடித்திருந்தார். அப்போது தான் அட்லீயுடன் காதல் ஏற்பட்டது.

ப்ரியா அட்லீ அதற்கு பின் பல படங்களில் நடித்திருந்தார் சிங்கம் படத்தில் கூட அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்திருந்தார். விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் நடத்திய ஒரு ஆடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பாராட்டுக்களை பெற்றிருந்தார். இப்படி பல திறமைகளை கட்டி போட்டு வீட்டிலே இருக்காமல் மீன்டும் சினிமாவில் நடிக்க வர வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தனது அடுத்தகட்ட புரொமோஷனையும் துவங்கி விட்டது. இணையதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பிகில் பட புரமோக்கள் வலம் வர தொடங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X