திருமணம் செய்வதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்துவிட்டார்... நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் புகார்!
சென்னை: திருமணம் செய்வதாக கூறி நடிகர் ஆர்யா தன்னிடம் 80 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக ஜெர்மனி பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது டெடி, எனிமி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். புஷ்பா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
முன்னதாக தனக்கு பெண் தேடும் படலமாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை
16 பெண்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தனக்கான பெண்ணை ஆர்யா தேர்வு செய்வார் என கூறி நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இறுதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

சாயிஷாவுடன் திருமணம்
கடைசியாக நடிகர் ஆர்யா கடந்த 2019ஆம் ஆண்டு தன்னுடன் கஜினி காந்த் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டார். தொடர்ந்து இருவரும் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

ஜெர்மனி சுகாதாரத்துறை
இந்நிலையில் நடிகர் ஆர்யா மீது ஜெர்மன் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதாவது இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர் ஜெர்மனி நாட்டில் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார்.

திருமணம் செய்ய ஆசை
இந்நிலையில் நடிகர் ஆர்யா, லாக்டவுன் நேரத்தில் தன்னிடம் தற்போது படம் இல்லை என்றும் பணத்திற்காக கஷ்டப்படுவதாகவும் கூறினார். மேலும் தன்னை விரும்புவதாகவும் திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார்.

திருமணம் செய்ய மறுப்பு
அதோடு திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சத்து 40,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டார் என்றும், பணத்தை பெற்றுக்கொண்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பணம் அனுப்பிய ஆதாரங்கள்
இதுதொடர்பாக பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார் விட்ஜா. மேலும் ஆர்யாவுக்கு பணம் அனுப்பிய ஆதாரங்களையும், அவரது தாயார் தன்னை திட்டிய ஆதாரங்களையும் புகாருடன் விட்ஜா இணைத்துள்ளதாகவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











