அதே சிரிப்பு.. கண்ணு.. புருவம்.. உதடு.. அந்த மச்சம் கூட.. சிலுக்கேதான்.. சிலாகிக்கும் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: சில்க் ஸ்மிதாவை போன்றுள்ள இளம்பெண் நாள்தோறும் வெளியிடும் டிக்டாக் வீடியோவால் சில்க் ஸ்மிதாவை மீண்டும் பார்த்த நிம்மதி கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சில்க் ஸ்மிதா.. தமிழ் சினிமா அவ்வளவு எளிதில் மறக்க முடியாத கவர்ச்சிக்காடு. 1980 மற்றும் 90களில் தமிழ் திரைத்துறையில் முக்கிய இடத்தை தனக்கென தக்க வைத்துக் கொண்டவர்.
என்னதான் முன்னணி ஹீரோக்களின் படம் என்றாலும் சில்க் ஸ்மிதா கட்டாயம் ஒரு பாடலிலாவது இருந்து விடுவார். 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்தவர்.

சில்க் ஸ்மிதா மரணம்
ஆனால் 1996ஆம் ஆண்டு குடும்பப் பிரச்சனைக் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு, தமிழ் சினிமிவையும் தமிழ் சினிமா ரசிகர்களையும் நீங்கா துயரில் ஆழ்த்தினார். இன்றும் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள், நினைவு நாள் என்றால் தமிழ் திரையுலகம் அவரை நினைவு கூர்ந்து வருகிறது.

தலைப்பு செய்தி
இந்நிலையில் சில்க் ஸ்மிதாவை போன்றே அச்சு அசலாக இருக்கும் இளம் பெண் ஒருவர் கடந்த ஒரு வாரமாய் டிக் டாக் ஆப் மூலம் கலக்கி வருகிறார். சில்க் ஸ்மிதா 2.0 என்று ஊடகங்கள் அவரை தலைப்புச் செய்தியாக்கி வருகின்றன.

தகவல் இல்லை
டிக் டாக் மூலம் அனைவரையும் வியக்க வைக்கும் அந்த இளம்பெண் யார் என்று பேட்டியெடுக்க சில ஊடகங்களும், யூட்யூப் சேனல்களும் தேடி வருகின்றனர். ஆனால் அந்த பெண் குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
ஒவ்வொரு அங்கமும்
டிக்டாக்கில் அவர் நாள்தோறும் புதுபுது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோக்களில் அவரின் கண்கள், புருவம், மூக்கு, உதடு என ஒவ்வொன்றும் அச்சில் வார்த்ததுபோல் சில்க் ஸ்மிதாவை போன்றே உள்ளது.

உதட்டோரம் மச்சம்
தாடையின் வலது பக்கத்தில் உதட்டோரம் உள்ள அந்த மச்சம் கூட சில்கை நினைவுப்படுத்தும் வகையிலேயே உள்ளது.சில்க் ஸ்மிதாவை போன்றே மூக்கை சுளித்து அவர் சிரிக்கும் சிரிப்பு ஒன்றே போதும், அவர் தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவின் இடத்தை நிரப்பி விடுவார் என்று.

எந்த ஊருமா நீ?
இந்த பெண் வெளியிடும் வீடியோக்களால் மீண்டும் சில்க் நினைவில் வாடும் ரசிகர்கள், சில்க் ஸ்மிதாவையே மீண்டும் பார்ப்பதாக கூறி வருகின்றனர். மேலும் அவரது வீடியோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் எந்த ஊருமா நீ.. என கேட்டு வருகின்றனர்.

கண்களால் கிக்..
அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி.. ஒரு மாலை இளவேனில் நிறம்.. என்னவளே அடி என்னவளே.. உள்ளிட்ட பாடல்களுளையும் டப்ஸ்மேஷ் செய்துள்ளார். அதோடு டயலாக்குகள் பலவற்றிற்கும் உதட்டை சுளித்து கண்களாலேயே பேசி கிக் ஏற்றியிருக்கிறார் இவர்.

நிச்சயம் ஒரு ரவுண்ட்..
நடிப்பு பற்றி பெரிதும் தெரியாமல் தனக்கு தெரிந்ததை வைத்து வீடியோ போடும் போதே இப்படி அசத்தும் இவர், முறையாக நடிப்பு பயிற்சி கொடுத்து வழியை காட்டினால் இவரும் சில்க் ஸ்மிதா போல் நிச்சயம் ஸ்ட்ராங்கான ஒரு இடத்தை பிடிப்பார் என்கின்றனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications