ரஜினி ரசிகர்களை உசுப்பேற்றும் வாலு...

By Mayura Akilan

சூடாக ஜிகர்தண்டா பரிமாறும் சித்தார்த் சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வாலு ட்ரெயிலர் நேற்று வெளியாகியுள்ளது.

ஜிகிர்தண்டா திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்கள் இந்த ட்ரெய்லர்களைப் பகிர்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிம்புவின் வாலு

சிம்புவின் வாலு

ஹன்சிகா உடன் சிம்புவிற்கு காதல் ஏற்படக் காரணமான வாலு திரைப்படம் டிரெயிலர் நேற்று வெளியானது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப் போல அழகான சிம்பு, அம்சமான ஹன்சிகா என செம ஜோடி.

ரொமான்ஸ் அடிதடி

ரொமான்ஸ் அடிதடி

சிம்புவின் குறும்புத்தனத்திற்காக வாலு என்று வைக்கப்பட்ட பெயரையே படத்தின் தலைப்பாக்கிவிட்டார்கள் போல.

ரொமான்ஸ், அடிதடி என சிம்பு ரசிகர்களுக்கு ஏற்ற படமாக இது இருக்கும் என்பது போல ட்ரெயிலர் அமைந்துள்ளது.

குசும்பு டயலாக்

குசும்பு டயலாக்

நானெல்லாம் சும்பா போற பொண்ணையே பாப்போம், சும்மா சும்மா பாக்குற பொண்ணை எப்படி சார் விட்டுட்டு போவோம் என்ற குசும்பு டயலாக் சிம்புவின் பஞ்ச். கூடவே வழக்கம் போல சந்தானத்தின் நகைச்சுவையும் உள்ளது.

நயன்தாரா வம்பு

நயன்தாரா வம்பு

சிறுமியின் பெயரை கேட்கிறார் சிம்பு. அந்த சிறுமி நயன்தாரா என்கிறது உடனே நயன்தாரா வேணாம், ஆன்ட்ரியாவும் வேணாம் என்று பாடுகிறார் சிம்பு தியேட்டரில் நிச்சயம் இந்த சீனுக்கு விசில் பறக்கும்

அடிக்கடி பஞ்ச்

அடிக்கடி பஞ்ச்

போட்டியில ஜெயிக்கணும்னா குதிரை மாதிரி ஓடணும். ஜெயிச்சதுக்கு அப்புறம் குதிரையை விட வேகமா ஓடணும் என்ற வசனம் யாருக்கு வைக்கப்பட்ட பஞ்ச் என்று தெரியவில்லை.

ரஜினிக்கு எதிரான வசனமா?

ரஜினிக்கு எதிரான வசனமா?

மன்னிச்சு விடறதுக்கு நான் பாட்சா இல்லைடா ஆண்டனி என்ற வசனம் நிச்சயம் ரஜினி ரசிகர்களை உசுப்பேற்றும் என்று கூறப்படுகிறது.

ஹனி ஹன்சிகா

ஹனி ஹன்சிகா

ஹன்சிகா சில நொடிகள் வந்தாலும் கலர்ஃபுல். ஹனியாக இருக்கிறார் ஹன்சிகா. வாலு படம் பற்றி புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த ட்ரெயிலர்.

ஜிகர்தண்டா ட்ரெயிலர்

ஜிகர்தண்டா ட்ரெயிலர்

ஜிகர்தண்டா படத்தின் முதல் ட்ரெயிலர் மார்ச் மாதம் வெளியானது. இதில் மதுரையில் இருக்கும் ரவுடி கும்பல், அவர்கள் செய்யும் அட்டூழியங்கள், லட்சுமி மேனன் - சித்தார்த் காதல், தாதாவான சிம்ஹாவின் முரட்டுத்தனம் முதலானவை இடம்பெற்றன.

நகைச்சுவை கலக்கல்

நகைச்சுவை கலக்கல்

தற்போது வெளியிட்டப்பட்ட ட்ரெய்லரில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிம்ஹாவிடம் வேலை செய்யும் ரவுடிகள் 'ஆப்பி பர்த்துடே உனக்கு' என அவரை வாழ்த்தி, பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவதாக துவங்குகிறது.

வில்லனுடன் ஆடும் லட்சுமி மேனன்

வில்லனுடன் ஆடும் லட்சுமி மேனன்

இதிலும் மதுரை ரவுடிக்களின் அடிதடிகள் தொடர்கின்றன. முக்கியமாக, நாயகனுக்கான பாடலைப் போல, சிம்ஹாவுக்கென தனிப் பாடல் ஒன்றும், அவரோடு லட்சுமி மேனன், அம்பிகா ஆகியோர் நடனம் ஆடுவதாகவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது.

வன்முறைக்கு எதிரான மெசேஜ்

வன்முறைக்கு எதிரான மெசேஜ்

ட்ரெய்லரின் முடிவில், சித்தார்த், "சார் இது அந்த மாதிரி ஸ்கிரிப்ட் இல்லை சார். இதுல வந்து, சமுதாயத்துல நடக்குற வன்முறையை எதிர்த்து உலக அமைதிய ஸ்ட்ரெஸ் பண்ணி ஸ்ட்ராங்கா ஒரு மெசேஜ் சொல்லப்போறோம் சார்" எனச் சொல்கிறார்.

ரவுடிகளிடம் சிக்கிய நாயகன்

ரவுடிகளிடம் சிக்கிய நாயகன்

லோக்கல் ரவுடியிசம், அதில் சிக்கி மீளும் நாயகனின் கதையை புது ஃப்ளேவரில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொல்ல முயற்சிப்பதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X