ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!
Recommended Video

சென்னை : 'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கியிருக்கிறார் ப்ரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்தவருக்கு, 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலே சிறப்பான அங்கீகாரம். முதல் படமான 'மேயாத மான்' படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டார்.
ரசிகர்கள் சிலர் இவரை அடுத்த த்ரிஷா எனவும் சொல்லிவருகிறார்கள். தற்போது இவரது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்திருக்கிறது. நடிகர் கார்த்தியுடன் அடுத்ததாக ஜோடி சேர்கிறாராம் ப்ரியா.

'பசங்க' படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்குகிறாராம். தற்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. அதன் பிறகு இவர் பாண்டிராஜ் படத்தில் இணையவிருக்கிறார்.
இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக 'ப்ரேமம் படத்தில் மேரியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறாராம். செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாகி இப்போது கதாநாயகியாகவும் முன்னேறியுள்ள ப்ரியா தமிழ் சினிமாவிலும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











