சந்திரமுகியாக மாறி கண்களை உருட்டி மிரட்டும் பாட்டி.. ஜோதிகாவே தோத்துடுவாங்க போல! வைரல் வீடியோ!
Recommended Video
சென்னை: வயதான பாட்டி ஒருவர் சந்திரமுகியாக மாறி கண்களை உருட்டி மிரட்டி டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
டப்ஸ்மேஷ், டிக்டாக் போன்றவை திறமை உள்ளவர்களுக்கு நல்ல தீனி போட்டு வருகின்றன. வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் பலரும் டிக்டாக்கில் தங்கள் திறமையை காட்டி பெரும் பிரபலமாகி வருகின்றனர்.
டிக்டாக், டப்ஸ்மேஷ் போன்றவற்றால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் திறமைசாலிகள் பெற்று வருகின்றனர். இளைஞர்கள் மட்டும்தான் என்றில்லாமல் வயதானவர்களும் என்டெர்டெய்ன்மென்ட்டுக்கு வயதில்லை என அசத்தி வருகின்றனர்.

பிகிலே..
அண்மையில் வெளியான பிகில் ட்ரெயிலரில், வயதான விஜய், கைகளை உயர்த்தி பிகிலே... என கத்தும் காட்சியையும் பேசும் டயலாக்கையும் பாட்டி ஒருவர் தத்ரூபமாக செய்து அசத்தினார். அந்த வீடியோ வைரலானது.

கண்களை உருட்டி
இந்நிலையில் வயதான பாட்டி ஒருவர் சந்திரமுகி படத்தில் வரும் ஜோதிகாவை போல உடை, மேக்கப், ஆபரணம் என அனைத்தையும் அணிந்து சந்திரமுகியாகவே மாறிவிட்டார். தோம் தோம் தோம் என ரிதத்திற்கு ஏற்ப கண்களை உருட்டி மிரட்டுகிறார் இந்த பாட்டி.
காலால் தாளம்
சலங்கை சத்தத்திற்கு ஏற்ப காலால் தாளம் போட்டும் பாடலுக்கு ஏற்ப சுற்றி சுற்றி நடனமாடியும் மிரட்டியிருக்கிறார் இந்த பாட்டி. பாட்டியின் இந்த மிரட்டல் வீடியோ வைரலாகி வருகிறது.

வயது ஒரு தடையில்லை
இந்த வீடியோவை பதிவேற்றி 24 மணி நேரத்திற்குள் 61000க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். வாழ்க்கையை கொண்டாட வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்திருக்கிறார் இந்த பாட்டி.


Click it and Unblock the Notifications











