ஐ அம் எ பேட் காப்.. என்னா நடை.. என்னா ஸ்டைல்.. ரஜினிக்கே டஃப் கொடுக்கும் ஆயா.. வைரலாகும் வீடியோ!
Recommended Video
சென்னை: டிக்டாக்கில் தர்பார் டயலாக்கை பேசி அசத்தும் பாட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான படம் தர்பார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இவருக்கா 70 வயது என்று சொல்லும் அளவுக்கு செம இளமையாக உள்ளார் மனுஷர். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் தர்பார் படத்தை ரஜினி ரசிகர்கள் பொங்கல் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

தர்பார் டயலாக்ஸ்
படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலுடன் பேசும் டயலாக்குகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, நம்மக்கிட்டயே கேம் ஆடுறாங்க.. ஒரிஜினலாவே நான் வில்லன்மா.. இது எப்டி இருக்கு.. ஐ அம் எ பேட் காப் போன்ற டயலாக்குகள் அப்ளாஸை அள்ளியுள்ளது.

டிக்டாக் பாட்டி
தர்பார் படத்தில் ரஜினிகாந்த் பேசும், டயலாக்குகள் பல இடங்களிலும் இப்போதே நெட்டிசன்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிக்டாக்கில் கலக்கும் பாட்டி ஒருவர் ரஜினியின் தர்பார் டயலாக்குகளை பேசி அசத்தியிருக்கிறார்.

இது எப்டி இருக்கு?
பேண்ட், ஷர்ட், உள் பனியன், கூலிங் கிளாஸ் என அட்டகாசமாக உடை அணிந்திருக்கிறார் அந்த பாட்டி. தொடர்ந்து போலீச லெப்ட்ல வச்சுக்கோ, ரைட்ல வச்சுக்கோ, ஸ்ட்ரைட்டா வச்சுக்காத.. என்னாப் பாக்குற? ஒரிஜினலாவே நான் வில்லன்மா.. இது எப்டி இருக்கு என்ற டயலாக்கை ரஜினியை போலவே கைகளை அசைத்து ஸ்டைலுடன் அசத்தலாய் பேசுகிறார்.

தீயாய் பரவும் வீடியோ
தொடர்ந்து ரஜினிகாந்தை போன்று நடந்தப் படியே ஐ அம் எ பேட் காப் என்று கூறி சிரிக்கிறார் அந்த பாட்டி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
வேற லெவல் வீடியோ
இந்த டிக்டாக் பாட்டி இதற்கு முன்பு பல வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இந்த வீடியோ வேற லெவல். ரஜினி ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











