7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் படம் இயக்கும் பிளாக்பஸ்டர் இயக்குர்.. இன்றைய டாப் 5பீட்ஸில்!

சென்னை: பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குநர் தமிழில் 7 வருடங்களுக்கு பிற படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்களும், பல்வேறு படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.

படத்தின் பூஜை, பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெயிலர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

ஜனவரி 7ல் ரிலீஸ்

ஜனவரி 7ல் ரிலீஸ்

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் ஆர்ஆர்ஆர் படத்தின் க்ளிம்ப்ஸ் மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை கூறியுள்ளார் பிகே. பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி உள்ள படம் ஆர்ஆர்ஆர். பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட்டுள்ள ரெளத்திரம் ரணம் ருத்ரம் படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியானது. இதுகுறித்து கூறியுள்ள பிகே படம் ஆர்ஆர்ஆர் படம் ஜனவரி 7 ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 7ஆண்டுகளுக்கு பிறகு

7ஆண்டுகளுக்கு பிறகு

இதேபோல் கேஎஸ் ரவிகுமார் தமிழில் இயக்கும் படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. தமிழ் சினிமாவில் டாப் இயகுநராக வலம் வந்தவர் கேஎஸ் ரவிக்குமார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என டாப் ஹீரோக்களை பல பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். ரஜினியை வைத்து முத்து, படையப்பா, கமல்ஹாசனின் தசாவதாரம் ஆகிய படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக தமிழில் ரஜினியை வைத்து லிங்கா படத்தை இயக்கினார் கேஎஸ் ரவிக்குமார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதன்பிறகு தமிழில் எந்தப் படத்தையும் இயக்காத கேஎஸ் ரவிகுமார் தற்போது 7ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் மீண்டும் திரைப்படம் இயக்கவுள்ளார் என கூறியுள்ளார்.

விருமன் ஜனவரியில் ரிலீஸ்

விருமன் ஜனவரியில் ரிலீஸ்

இதேபோல் விருமன் படம் ரிலீஸ் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஆகியோர் நடித்து வரும் படம் விருமன். இந்தப் படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தை டிசம்பருக்குள் முடித்து ஜனவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார் பிகே.

ஒரே நாளில் ரிலீஸ்

ஒரே நாளில் ரிலீஸ்

இதேபோல் சசிகுமார் நடித்துள்ள இரண்டு படங்கள் இந்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறியுள்ளார் பிகே. தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம்டா ஆகிய 2 படங்கள் நவம்பர் 26ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

புனித்தின் கடைசி படம்

புனித்தின் கடைசி படம்

மேலும் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் கடைசி படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மறைந்த புனித் ராஜ்குமார் கடைசியாக ஜேம்ஸ் படத்தில் நடித்தார். சேத்தன்குமார் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பாதி டப்பிங் பணிகள் முடிந்துள்ளன. இந்நிலையில் மீதியுள்ள டப்பிங் பணிகளை முடித்து ஜேம்ஸ் படத்தை புனித்தின் கடைசி படமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X