தனுஷின் ஹாலிவுட் படத்தில் இணையும் இந்திய நடிகை இவர் தான்

டெல்லி : தனுஷ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் ஹாலிவுட் படம் தி கிரே மேன். இந்த படத்தை தி ரூசோ பிரதர்ஸ் இயக்குகிறார்கள். ரேயன் ஜோஸ்லிங் மற்றும் கிறிஸ் ஈவன்ஸ் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

A hot young Indian actress joins Dhanushs Hollywood movie The Gray Man

நெட்ஃபிளிக்ஸ் தனது வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து வாங்கி உள்ள படம் இது தான். இந்த படத்தின் படப்பிடிப்பு 2 ஆண்டுகளாக அமெரிக்காவில் நடந்து வந்த நிலையில், தற்போது ஸ்பெயினிற்கு படப்பிடிப்பு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் மற்றொரு நாட்டில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இந்திய நடிகையான ஐஸ்வர்யா சோனாரும் இணைந்துள்ளார். மராத்தியில் மிக ஹிட்டான காமெடி படமான கே ரி ராஸ்கலா படத்தில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா. இந்த மராத்தி மொழி படத்தை தயாரித்தவர் பிரியங்கா சோப்ரா தான். ஐஸ்வர்யா நடிகை மட்டுமல்ல, தேசிய விருது பெற்ற வென்டிலேட்டர் படத்தின் டைரக்டர் ராஜேஷ் மபுஸ்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

தி கிரே மேன் படத்தில் மிக சிறிய ரோல் என்றாலும், முக்கியமாக ரோல் என்பதால் இப்படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டுள்ளார். இவர் நடிக்கும் காட்சிகளின் முதல் ஷாட் எடுக்கவே கிட்டதட்ட 6 மாதங்கள் ஆனதாம். தி கிரேமேன் படத்தில் தான் நடிக்கும் காட்சிகளை நடித்து முடித்து விட்டதாக கூறி உள்ள ஐஸ்வர்யா, அந்த ரோல் பற்றிய எந்த தகவலையும் வெளியிடவில்லை.

நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் தி கிரே மேன் படத்தில் கொலைகார கும்பல் ஒன்றின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகே தனுஷ் டி 43 பட வேலைகளில் இறங்குவார் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X