யப்பா.. இவ்ளோ பெரிய கட்அவுட்டா.. எனக்கா.. நம்ப முடியலையே.. ஆச்சரியத்தில் சமந்தா!
ஹைதராபாத்: ஹைதராபாத் தியேட்டர் ஒன்றில் நடிகை சமந்தாவுக்கு அவரது ரசிகர்கள் பிரமாண்ட கட் அவுட் வைத்துள்ளனர்.
நடிகை சமந்தா, தமிழில் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடித்துள்ள ஓ பேபி படம் நேற்று திரைக்கு வந்தது. இதனை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடிகை சமந்தாவுக்கு பிரமாண்ட கட் அவுட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
முன்னணி நடிகர்களுக்கு தான் ரசிகர்கள் கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் செய்வது வழக்கம். இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு முதல் முறையாக ரசிகர்கள் கட்வு அவுட் வைத்து ஆனந்தம் அடைந்துள்ளனர்.
தனக்கு கட் அவுட் வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளதாக கூறியுள்ளார் சமந்தார். மேலும் படத்திற்கு நல்ல வசூல் கிடைக்க வேண்டும் வசூல் வந்தால் தான் திருப்தியாக இருக்கும் என்றும் நடிகை சமந்தா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











